| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| வாலி | ஹரிஹரன் & அனுராதா ஸ்ரீராம் | தேவா | கல்லூரி வாசல் |
En Manathai Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : என் மனதை கொள்ளையடித்தவளே…
என் வயதை கண்டு பிடித்தவளே…
ஹே ஹே… என் மனதை கொள்ளையடித்தவளே…
ப ப ப… என் வயதை கண்டு பிடித்தவளே…
ஆண் : அழகிய முகம் எனக்கென தினம்…
அவசரம் என விழிகளில் விழும்…
மன தந்தியை படித்தேன்…
ஆண் : வந்தேன் அம்மம்மா…
இங்கு மின்னல் வேகத்தில்…
கண்டேன் உன்னைதான்…
ஒரு ஜன்னல் ஓரத்தில்…
—BGM—
ஆண் : மூச்சை போல உனைதானே…
இங்கு தினம் வாங்கும் இந்த நுரை ஈரல்…
நீ இல்லாமல் இருந்தாலே…
இந்த நுரை ஈரல் ஒரு குறை ஈரல்…
பெண் : நிதம் நிதம்தான் காதல் ராகம்…
நிகழ்த்திடதான் கேட்கும் தேகம்…
ஆண் : நீங்காமல் நெஞ்சில் இருக்கு…
உந்தன் பேர்தான் இங்கு தேசிய கீதம் எனக்கு… ஆஅஆ…
பெண் : என் மனதை கொள்ளையடித்தவனே…
என் வயதை கண்டு பிடித்தவனே…
—BGM—
பெண் : ஏப்ரல் மாதம் கொதித்தாலும்…
உன்னை அணைத்தாலே அது டிசம்பர்தான்…
டிசம்பர் மாதம் குளிர்ந்தாலும்…
உன்னை பிரிந்தாலே அது ஏப்ரல்தான்…
ஆண் : உனக்கெனத்தான் தோழி தோழி…
உருகுகிறேன் நீண்ட நாழி…
பெண் : நீ தீண்ட கூச்சம் பிறக்கும்…
கொஞ்ச நேரம் செல்ல…
நீ கேட்கும் மோட்சம் பிறக்கும்…
ஆண் : பபப்பா…
ஆண் : என் மனதை கொள்ளையடித்தவளே…
என் வயதை கண்டு பிடித்தவளே…
அழகிய முகம் எனக்கென தினம்…
அவசரம் என விழிகளில் விழும்…
ஆண் : மன தந்தியை படித்தேன்…
வந்தேன் அம்மம்மா…
இங்கு மின்னல் வேகத்தில்…
பெண் : கண்டேன் உன்னைதான்…
ஒரு ஜன்னல் ஓரத்தில்…
ஆண் : ஹம்மா ஹம்மம்மா ஹையோ ஹம்மம்மா…
பெண் : ஹையோ ஹைய்யய்யோ ஹையோ ஹைய்யய்யோ…
Notes : En Manathai Song Lyrics in Tamil. This Song from Kalloori Vaasal (1996). Song Lyrics penned by Vaali. என் மனதை பாடல் வரிகள்.
