சண்டிமுனி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாஹரிசரண்லியோன் ஜேம்ஸ்காஞ்சனா 2

Sandi Muni Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : சண்டிமுனி சடாமுனி…
மண்டிமுனி மகாமுனி…
வண்டிமுனி வாய்த்தாமுனி…
பாண்டிமுனி பறவைமுனி…

ஆண் : சுருட்டுமுனி சுடலைமுனி…
இருட்டுமுனி இளயமுனி…
காட்டுமுனி கருப்புமுனி…
மொட்டமுனி மூக்குமுனி…

ஆண் : உச்சிமுனி உண்டிமுனி…
ஜடாமுனி மாயமுனி…
வேதமுனி வீரமுனி…
நாதமுனி நல்லமுனி…

ஆண் : சொல்றா முனி பேர…

குழு : தொட்டு பாரு முனிய…
வந்துருக்கான் தனியே…
மந்திரமும் தந்திரமும் காலடியில் பணிய…

குழு : வெட்ட வெட்ட துளிர்ப்பேன்…
திட்டமிட்டு ஒழிப்பேன்…
பண்ணி வச்ச பாவத்துக்கு…
வட்டி போட்டு கொடுப்பேன்…

ஆண் : ஏ வா வந்து தொடு எங்க தொடு…
அடி தாங்க மாட்ட வா வந்து தடு எங்க தடு… ஓ…

குழு : காக்குறதும் முனிடா…
தாக்கறதும் முனிடா…
கண்ணெதிர சாகசங்கள் செய்யுறதும் முனிடா…

குழு : ஈட்டியென வெரலும்…
இடிப்போல கொரலும்…
என்ன இது என்ன இது…
எட்டு தெச மெரலும்…

ஆண் : உங்கப்பன் உன் பாட்டன் வந்தா கூட…
உன் மூச்சு தப்பாதுடா…
பழிவாங்கத்தான் பழிவாங்கத்தான்…
வந்தேனடா… ஆஅ…

—BGM—

ஆண் : வாழத்தான் வந்தோமே…
வாழ்க்கையை போட்டு எரிச்சியே…
வண்ணத்து பூச்சியின் கூட்டத்த…
கொன்னு குவிச்சிட்டியே…

குழு : காட்டேரி நடமாடுது…
கள்ளநரி கூத்தாடுது…
அநியாயம் விளையாடுது…
ஆளுகெல்லாம் களமாடுது…

குழு : அண்டம் அதில் கண்டம்…
பல கண்டம் அதில் பிண்டம்…
பல அஞ்சாமாலே வஞ்சம் தீர்…
ஹர ஹர ஹர ஹர ஹர…

ஆண் : ஏ காத்தும் நெருப்பும் கலந்த உருவம்…
பார்த்தால் போதும் பாறை உருகும்…
மோதி மோதி முழுசாய் அழிப்பேன்…
நீ வாடா மூடா…

குழு : தொட்டு பாரு முனிய…
வந்துருக்கான் தனியே…
மந்திரமும் தந்திரமும் காலடியில் பணிய…

குழு : வெட்ட வெட்ட துளிர்ப்பேன்…
திட்டமிட்டு ஒழிப்பேன்…
பண்ணி வச்ச பாவத்துக்கு…
வட்டி போட்டு கொடுப்பேன்…

ஆண் : ஏ வா வந்து தொடு எங்க தொடு…
அடி தாங்க மாட்ட வா வந்து தடு எங்க தடு… ஓ…

—BGM—

ஆண் : கொல்லாம விடமாட்டேன்…
கொன்னியே எங்க கொலத்தயே…
இல்லாம செய்தாயே…
என்னோட எல்லாம் பறிச்சியேடா…

குழு : காண்டாமணி கினு கினுகிது…
கடும் சூறை பற பறக்குது…
மலை கூட கிடு கிடுக்குது…
மதயானை தடதடங்குது…

குழு : விதை ஒன்னு கெளம்பி நிக்குது…
விவகாரம் தீப்பிடிக்குது…
விண்ணகமும் வெட வெடக்குது…
ஹர ஹர ஹர ஹர ஹர…

ஆண் : ஹே… உலகில் உள்ள தீமைக்கெல்லாம்…
உந்தன் சாவே பாடம் ஆகும்…
உருட்டி உருட்டி பொரட்டி பொரட்டி…
கொள்வேனே வாடா…

ஆண் : சொல்றா முனி பேர…

குழு : தொட்டு பாரு முனிய…
வந்துருக்கான் தனியே…
மந்திரமும் தந்திரமும் காலடியில் பணிய…

குழு : வெட்ட வெட்ட துளிர்ப்பேன்…
திட்டமிட்டு ஒழிப்பேன்…
பண்ணி வச்ச பாவத்துக்கு…
வட்டி போட்டு கொடுப்பேன்…

ஆண் : ஏ வா வந்து தொடு எங்க தொடு…
அடி தாங்க மாட்ட வா வந்து தடு எங்க தடு… ஓ…

குழு : காக்குறதும் முனிடா…
தாக்கறதும் முனிடா…
கண்ணெதிர சாகசங்கள் செய்யுறதும் முனிடா…

குழு : ஈட்டியென வெரலும்…
இடிப்போல கொரலும்…
என்ன இது என்ன இது…
எட்டு தெச மெரலும்…

ஆண் : உங்கப்பன் உன் பாட்டன் வந்தா கூட…
உன் மூச்சு தப்பாதுடா…
பழிவாங்கத்தான் பழிவாங்கத்தான்…
வந்தேனடா… ஆஅ…

ஆண் : சண்டிமுனி சடாமுனி…
மண்டிமுனி மகாமுனி…
வண்டிமுனி வாய்த்தாமுனி…
பாண்டிமுனி பறவைமுனி…

ஆண் : சுருட்டுமுனி சுடலைமுனி…
இருட்டுமுனி இளயமுனி…
காட்டுமுனி கருப்புமுனி…
மொட்டமுனி மூக்குமுனி…

ஆண் : உச்சிமுனி உண்டிமுனி…
ஜடாமுனி மாயமுனி…
வேதமுனி வீரமுனி…
நாதமுனி நல்லமுனி…


Notes : Sandi Muni Song Lyrics in Tamil. This Song from Kanchana 2 (2015). Song Lyrics penned by Viveka. சண்டிமுனி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading