வாயா என் வீரா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
கோ. சேஷாசக்திஸ்ரீ கோபாலன்லியோன் ஜேம்ஸ்காஞ்சனா 2

Vaaya En Veera Song Lyrics in Tamil


—BGM—

பெண் : ராப்பகலா அழுதாச்சு…
கண்ணு ரெண்டும் வாடிபோச்சு…
நாப்பது நாள் விடிஞ்சாச்சு…
துரும்பென எழசாச்சு…

பெண் : ஆசை நோய் ஆராதையா…
மசங்கு விழி கசங்குதையா…
கை பிடிக்க நீயும்…

பெண் : வாயா என் வீரா…
கன்னக்குழி குழி காஞ்சி கெடக்குது…
வாயா என் வீரா…
நெஞ்சு வலி வலி கொஞ்சம்…
மறைஞ்சி போகட்டும்…

பெண் : வாயா என் வீரா…
கண்ணுகுழி குழி காஞ்சி கெடக்குது…
வாயா நீ வாயா…
மயில் தோகை மேலே…
மலையை போலேவே… ஏ…

—BGM—

பெண் : மூச்சு காத்துல மாறுதம் போல மாமா… வா…
மார்போடு பாஞ்சிக்கோ…
கொஞ்சம் சாஞ்சிக்கோ…
என்ன மேஞ்சிக்கோ நிதானமா…

பெண் : ராசாவே ஒன் ரோசா பூவும்…
நான்தானே நெஞ்சில்…
என்ன வெதச்சிக்கோ…
கொஞ்சம் அணைசிக்கோ…
என்ன வளச்சிக்கோ தாராளமா…

பெண் : நீளாதோ நீ…
எனை தீண்டும் நிமிஷங்கள்…
நூறு ஜென்மம் போனால் என்ன…
நீதான் என் சொந்தம்…

பெண் : வாயா என் வீரா…
கன்னக்குழி குழி காஞ்சி கெடக்குது…
வாயா என் வீரா…
நெஞ்சு வலி வலி கொஞ்சம்…
மறைஞ்சி போகட்டும்…

பெண் : வாயா என் வீரா…
கண்ணுகுழி குழி காஞ்சி கெடக்குது…
வாயா நீ வாயா…
மயில் தோகை மேலே…
மலையை போலேவே… ஏ…

—BGM—

குழு (பெண்கள்) : வாயா என் வீரா…
வாயா என் வீரா…
வாயா என் வீரா…
வாயா என் வீரா…

பெண் : கார்த்திகை போச்சு மார்கழி ஆச்சு…
பனி காத்தும் அனல் போலே கொதிக்குதே…
நதி துடிக்குதே பறி தவிக்குதே…
பாயமாத்தான்…

பெண் : பாவை தாவம் யாருக்கு லாபம்…
புயலோடு எலபோல உசுறோடுதே…
உன் கூடவே உன்னை தேடுதே…
ஓயாமதான்…

பெண் : வாழாதே பூங்கொடி…
காற்றே வருடாமல்…
விண்வெளியே வானவில் போல்…
உன்னால் மறாதோ…

பெண் : வாயா என் வீரா…
கன்னக்குழி குழி காஞ்சி கெடக்குது…
வாயா என் வீரா…
நெஞ்சு வலி வலி கொஞ்சம்…
மறைஞ்சி போகட்டும்…

பெண் : வாயா என் வீரா…
கண்ணுகுழி குழி காஞ்சி கெடக்குது…
வாயா நீ வாயா…
மயில் தோகை மேலே…
மலையை போலேவே… ஏ…

—BGM—


Notes : Vaaya En Veera Song Lyrics in Tamil. This Song from Kanchana 2 (2015). Song Lyrics penned by Ko Sesha. வாயா என் வீரா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading