சாஞ்சாடு சாஞ்சாடு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம்தேவாஉயிரிலே கலந்தது

Sainthadu Sainthaadu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : சாஞ்சாடு சாஞ்சாடு சாஞ்சாடு கண்ணே…
தோளோடு தோள் சேர்த்து சாஞ்சாடு கண்ணே…

ஆண் : உதிரம் நிறம் மாற்றி பாலாக்கினாளோ…
அன்னை அவள் மார்பில் உயிரூட்டினாளோ…
ஆரீராரி ராராரோ… ஆரீராரி ராராரோ…

ஆண் : சாஞ்சாடு சாஞ்சாடு சாஞ்சாடு கண்ணே…
தோளோடு தோள் சேர்த்து சாஞ்சாடு கண்ணே…

—BGM—

ஆண் : கருவில் நம்மை தாங்க வரம் கேட்கிறாள்…
தான் தாயாகவே அவள் தவம் செய்கிறாள்…
மரணம் அதை பார்த்து சேய் காண்கிறாள்…
மண்ணில் இரண்டாம் முறை நம் தாய் பிறக்கிறாள்…

ஆண் : பிள்ளை கொஞ்சி விளையாடவே…
பொம்மை வடிவில் அவள் மாறினாள்…
இமை மேலே இமயம் நமக்காக சுமந்தாள்…
ஆரிராரோ ஆராரோ…

ஆண் : சாஞ்சாடு சாஞ்சாடு சாஞ்சாடு கண்ணே…
தோளோடு தோள் சேர்த்து சாஞ்சாடு கண்ணே…

—BGM—

ஆண் : தாயின் இரு பிள்ளை இரு கண்களே…
ஒன்று வலித்தாலுமே அவள் மனம் வாடுமே…
உண்மை புரியாத ஒரு பிள்ளையே…
தன் அறியாமையால் தினம் தடுமாறுமே…

ஆண் : தாயின் அன்பு பொய்யாகுமா…
தாய் பால் என்றும் விஷமாகுமா…
சுகமான உலகம் கருவறை ஆகும்…
ஆரிராரோ ஆராரோ…

ஆண் : சாஞ்சாடு சாஞ்சாடு சாஞ்சாடு கண்ணே…
தோளோடு தோள் சேர்த்து சாஞ்சாடு கண்ணே…

ஆண் : உதிரம் நிறம் மாற்றி பாலாக்கினாளோ…
அன்னை அவள் மார்பில் உயிரூட்டினாளோ…
ஆரீராரி ராராரோ… ஆரீராரி ராராரோ…

—BGM—


Notes : Sainthadu Sainthaadu Song Lyrics in Tamil. This Song from Uyirile Kalanthathu (2000). Song Lyrics penned by Vairamuthu. சாஞ்சாடு சாஞ்சாடு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading