ரத்தம் டைட்டில் ட்ராக்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிவிஜய் பிரகாஷ்கண்ணன் நாராயணன்ரத்தம்

Raththam Title Track Song Lyrics in Tamil


BGM

ஆண் : ரத்தம் ரத்தம்…
வழிந்திட கத்தும் கத்தும்…
உயிர்களின் சத்தம் சத்தம்…
தொடங்குது யுத்தம் யுத்தம்…

ஆண் : நித்தம் நித்தம்…
கதறிடும் சித்தம் சித்தம்…
சினந்திட சுற்றம் முற்றும்…
எரிமலை பற்றும் பற்றும்…

ஆண் : மறைவினில் இருந்தொரு வில்லங்கம்…
புரிந்திடு விலங்குகள் எங்கெங்கும்…
போர் மொழியே வெல்லும்…

ஆண் : ரத்தம் ரத்தம்…
வழிந்திட கத்தும் கத்தும்…
உயிர்களின் சத்தம் சத்தம்…
தொடங்குது யுத்தம் யுத்தம்…

BGM

ஆண் : வாள் எடுப்பதில்லை தோள் துடிப்பதில்லை…
ஏழு உலகமும் பொய்யில் உருளுதே…
கால் நடப்பதில்லை கை கொடுப்பதில்லை…
ஊழ் விலகிட உண்மை நிமிருதே…

ஆண் : ஊரே நெருப்பாற்றில் நீந்த…
யார்தான் இசை கேட்பாரோ…
வேரை கரையான்கள் தீண்ட…
பூவை எவர் பார்ப்பாரோ…

ஆண் : கொடியது கொடியது சொல்லில்லை…
கருகிய மலர்களில் தேன் இல்லை…
யார் எடுப்பார் முள்ளை…

ஆண் : ரத்தம் ரத்தம்…
வழிந்திட கத்தும் கத்தும்…
உயிர்களின் சத்தம் சத்தம்…
தொடங்குது யுத்தம் யுத்தம்…

BGM

ஆண் : ஏன் மடமை என்று…
ஊர் மனதை வென்று…
போர் புரியவே வந்தான் ஒருவனே…

ஆண் : வான் வெளியை வென்று…
ஆழ் கடலும் சென்று…
ஓர் படையினை வெல்வான் நகரனே…

ஆண் : சாம்பல் மாலை மேல் நின்று…
ஆடும் நரிக்கூட்டத்தை…
கீழ சரிக்காமால் போனால்…
தோற்போம் வருங்காலத்தை…

ஆண் : சரியெது தவறெது சொல் என்றான்…
சரித்திர பகைகளை கொல்யென்றான்…
பேய் நடுங்க நின்றான்…

ஆண் : ரத்தம் ரத்தம்…
வழிந்திட கத்தும் கத்தும்…
உயிர்களின் சத்தம் சத்தம்…
தொடங்குது யுத்தம் யுத்தம்…

ஆண் : நித்தம் நித்தம்…
கதறிடும் சித்தம் சித்தம்…
சினந்திட சுற்றம் முற்றும்…
எரிமலை பற்றும் பற்றும்…

ஆண் : மறைவினில் இருந்தொரு வில்லங்கம்…
புரிந்திடு விலங்குகள் எங்கெங்கும்…
போர் மொழியே வெல்லும்…


Notes : Raththam Title Track Song Lyrics in Tamil. This Song from Raththam (2023). Song Lyrics penned by Yugabharathi. ரத்தம் டைட்டில் ட்ராக் பாடல் வரிகள்.


Scroll to Top