ஒரு நாள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுவிஜய் ஆண்டனி & அறிவுகண்ணன் நாராயணன்ரத்தம்

Oru Naal Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரு நாள் தெருவில் இறங்கி நான் நடந்தேன்…
என் எதிரில் அங்கு ஒரு மனிதன்…
இரு கைகள் இரு கால்கள்…
ஒரு பரஸ்பர புன்னகையோடு…
உரையாடிட வந்தான் என்னோடு…
முதலாய் உன் பேரென்ன…
பிறகாய் உன் ஊரென்ன…

ஆண் : நீ யார் யார் என கேட்டால்…
நான் சொல்லி முடித்திடும் முன்பே…
அவன் நட்பை முறித்தான் அங்கே…
நான் சொன்ன விவரத்தை கேட்ட நொடி…
அவன் என்னை வெறுத்தான் அன்றே…

ஆண் : நா என்ன சொன்னேன்…
நா யாருன்னு சொன்னேன்…
வேறென்ன சொன்னேன்…
என் உண்மைய சொன்னேன்…

ஆண் : நா என்ன சொன்னேன்…
நா யாருன்னு சொன்னேன்…
வேறென்ன சொன்னேன்…
என் உண்மைய சொன்னேன்…

ஆண் : எது நம்மை வேறாக்கி வைத்தது…
பிரிவு இங்கு யாரோ விதைத்தது…
எது நம்மை வேறாக்கி வைத்தது…
பிரிவு இங்கு யாரோ விதைத்தது…

ஆண் : பிடிக்கல… என்ன ஏன் உனக்கு பிடிக்கல…
வெறுக்குற… அந்த காரணத்த சொல்லித் தொலையேன்…
பிடிக்கல… என்ன ஏன் உனக்கு பிடிக்கல…
வெறுக்குற… அந்த காரணத்த சொல்லித் தொலையேன்…

BGM

ஆண் : ராயகத்தின் வீதியெங்கும் ரத்த ஆறு…
உன் ஆணவத்தை தூக்கி போட்டு சுற்றிப்பாரு…
ரத்த ஆறு உத்துப்பாரு…

BGM

ஆண் : என் கதையை நான் சொல்ல வந்தேன்…
இரு கண்ணில் கனேவாடு வந்தேன்…

ஆண் : தட்டு தடுமாறி…
நான் மேல வந்து ஏறி
நான் பட்ட அனுபவம்…
இப்ப சொல்லப்போறேன் ஸ்டோரி…

ஆண் : ஒருநாள் என் தெருவில் நான் இறங்கி நடந்தேன்…
என் எதிரில் அங்கு ஒரு மனிதன்…
நெருங்கி வந்தான் உறக்கக் சொன்னான்…
நீ மனசனே இல்ல…

ஆண் : வெயிலில் ஓடி தினம் வேலை செய்துதான்…
தோல் கருத்தவன் நான்…
தொழுகை செய்து பின் தொழிலும் செய்து…
அந்த இறைவன் பாலகன் நான்…

ஆண் : பாலினங்கள் காதலுக்குள் பார்ப்பதில்லை நான்…
நீங்கள் குத்தும் முத்திரை ஏற்பதில்லை நான்…

ஆண் : அவ பிடிக்கல இவ பிடிக்கல…
முகம் பிடிக்கல மதம் பிடிக்கல…
மொழி பிடிக்கல…
பிறப்பு இறப்பு படிப்பு வளர்ப்பு…
தின்னும் சோறு…
வாடாத ஊரு உணவு கனவு உறவு இளவு…
தேசம் மோசம் காதல் பாசம்…
சொன்ன வார்த்த பிடிக்கல…
சொல்லும் வாயும் பிடிக்கல…

ஆண் : மண்ணுக்குள்ள போகும் போதும்…
கொண்ட வெறுப்பு மறக்கல…
எவனும் மறக்கல எவனும் மறக்கல…

BGM

ஆண் : ராயகத்தின் வீதியெங்கும் ரத்த ஆறு…
உன் ஆணவத்தை தூக்கி போட்டு சுற்றிப்பாரு…

BGM


Notes : Oru Naal Song Lyrics in Tamil. This Song from Raththam (2023). Song Lyrics penned by Arivu. ஒரு நாள் பாடல் வரிகள்.


Scroll to Top