ஆடி அடங்கும் வாழ்க்கையடா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சுரதாசீர்காழி கோவிந்தராஜன்வி. குமார்நீர்க்குமிழி

Aadi Adangum Vazhkaiyada Song Lyrics in Tamil


ஆண் : ஆடி அடங்கும் வாழ்க்கையடா…
ஆறடி நிலமே சொந்தமடா…
ஆடி அடங்கும் வாழ்க்கையடா…

BGM

ஆண் : முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா…
கண் மூடினால் காலில்லா கட்டிலடா…

ஆண் : ஆடி அடங்கும் வாழ்க்கையடா…
ஆறடி நிலமே சொந்தமடா…
ஆடி அடங்கும் வாழ்க்கையடா…

BGM

ஆண் : பிறந்தோம் என்பதே முகவுரையாம்…
பேசினோம் என்பதே தாய்மொழியாம்…
மறந்தோம் என்பதே நித்திரையாம்…
மரணம் என்பதே முடிவுரையாம்…

ஆண் : ஆடி அடங்கும் வாழ்க்கையடா…
ஆறடி நிலமே சொந்தமடா…
ஆடி அடங்கும் வாழ்க்கையடா…

BGM

ஆண் : சிரிப்பவன் கவலையை மறக்கின்றான்…
தீமைகள் செய்பவன் அழுகின்றான்…
இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை…
இறந்தவன் அல்லவோ திறக்கின்றான்…

ஆண் : ஆடி அடங்கும் வாழ்க்கையடா…
ஆறடி நிலமே சொந்தமடா…
ஆடி அடங்கும் வாழ்க்கையடா…

BGM

ஆண் : வகுப்பார் அதுபோல் வாழ்வதில்லை…
வந்தவர் யாருமே நிலைத்ததில்லை…
வகுப்பார் அதுபோல் வாழ்வதில்லை…
வந்தவர் யாருமே நிலைத்ததில்லை…

ஆண் : தொகுப்பார் சிலரதை சுவைப்பதில்லை…
தொகுப்பார் சிலரதை சுவைப்பதில்லை…
தொடங்குவார் சிலரதை முடிப்பதில்லை…


Notes : Aadi Adangum Vazhkaiyada Song Lyrics in Tamil. This Song from Neerkumizhi (1965). Song Lyrics penned by Suratha. ஆடி அடங்கும் வாழ்க்கையடா பாடல் வரிகள்.


Scroll to Top