போ உறவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிசித் ஸ்ரீராம்ஏ எச் காஷிஃப்காற்றின் மொழி

Po Urave Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீ உன் வானம்…
உனக்கென ஓர் நிலவு…
நீ உன் பாதை…
உனக்கென்றே உன் பூங்காற்று…

ஆண் : நான் என் கூதல்…
நனையாத மௌனங்கள்…
நான் நம் கூடு…
தனிமை நீக்கும் பாடல்கள்…

ஆண் : உன் புன்னகையின் பின்னணியில்…
சிலரில் சோகம் எப்போதும்…
யார் என்றே நீ அறியா…
இதயங்களில் மழையானாய்…
நான் என்றே கண்டும் ஏன்…
பொழியாமல் நீங்கி போனாய்…

ஆண் : போ உறவே என்னை மறந்து…
நீ உந்தன் கனவுகள் துரத்தியே…
போ உறவே சிறகணிந்து…
நீ உந்தன் கணங்களை உதறியே…

ஆண் : போ உறவே என்னை மறந்து…
நீ உந்தன் கனவுகள் துரத்தியே…
போ உறவே சிறகணிந்து…
நீ உந்தன் கணங்களை உதறியே…

ஆண் : போ உறவே…

BGM

ஆண் : மாற்றங்கள் அதையும்…
தூரங்கள் இதையும்…
என் சிறு இதயம் பழகுதடி…

ஆண் : நீ அற்ற இரவு…
வீட்டுக்குள் துறவு…
ஏன் இந்த உறவு விலகுதடி…

ஆண் : இது நிலை இல்லை…
வெறும் மலை அன்றோ…
இது மலை இல்லை…
சிறு மழை என்றோ…

ஆண் : இந்த நொடிகள் கனவே எனவே உறவே…
சத்தமிட்டு சொல்லிவிட்டு முத்தமிட்டு தள்ளிவிட்டு…

ஆண் : போ உறவே என்னை மறந்து…
நீ உந்தன் கனவுகள் துரத்தியே…
போ உறவே சிறகணிந்து…
நீ உந்தன் கணங்களை உதறியே…

ஆண் : போ உறவே என்னை மறந்து…
நீ உந்தன் கனவுகள் துரத்தியே…
போ உறவே சிறகணிந்து…
நீ உந்தன் கணங்களை உதறியே…

ஆண் : போ உறவே…


Notes : Po Urave Song Lyrics in Tamil. This Song from Kaatrin Mozhi (2018). Song Lyrics penned by Madhan Karky. போ உறவே பாடல் வரிகள்.


Scroll to Top