ராஜ்யமா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிபி.ஜெயச்சந்திரன்ஏ.ஆர்.ரகுமான்பாபா

Rajayama Song Lyrics in Tamil


BGM

ஆண் : ராஜ்யமா இல்லை இமயமா…
எங்கிவன் நாளை எங்கிவன்…
மன்னனா இல்லை மௌல்வியா…
யாரிவன் நாளை யாரிவன்…

ஆண் : ஆயிரம் அதிசயம்…
அமைந்தது பாபா ஜாதகம்…
ஆயிரம் அதிசயம்…
அமைந்தது பாபா ஜாதகம்…

ஆண் : கேள்வியாய் வாழ்கிறான்…
மௌனத்தை ஆள்கிறான்…

ஆண் : ராஜ்யமா இல்லை இமயமா…
ராஜ்யமா இல்லை இமயமா…

BGM

ஆண் : மகனில்லை மகனில்லை என்னும் நாளில்…
மடியில் வந்த ராஜாவை…
தமிழர்கள் மனையெங்கும் மனம் வீச…
தெய்வம் தந்த ரோஜாவை…

BGM

ஆண் : முதுகினில் புகழினை தூக்காமல்…
மூட்டை தூக்க பார்த்தாலே…
விதியிது விதியிது என எண்ணி…
மூச்சு வாங்கி வேர்த்தாலே…

ஆண் : தொழில் என்ன செய்தாலும்…
இழிவில்லை என்பானே…
உழைக்காமல் உண்டால் தான்…
பிழை என்று சொல்வானே…

ஆண் : ஏற்றமோ இறக்கமோ…
எதையுமே ஏற்பவன்…

ஆண் : ஆயிரம் கோடி அதிசயம்…
அமைந்தது பாபா ஜாதகம்…

BGM

ஆண் : கடவுளை மறுத்து இவன் நாள் தோறும்…
கூறினானே நாத்தீகம்…
பகுத்தறிவாளனின் நெஞ்சினிலே…
பூத்த தென்ன ஆதிக்கம்…

BGM

ஆண் : திருமகன் வருகிற திருநீரை…
நெற்றி மீது தினம் பூசி…
அதிசயம் அதிசயம் பெரியார்தான்…
ஆனதென்ன ராஜாஜி…

ஆண் : தனது அன்பு தாயை கை தொழும் பாபாதான்…
சிந்தையில் எந்நாளும் சின்னஞ்சிறு பாப்பாதான்…

ஆண் : ஏழைகள் பார்வையில்…
முழு மனிதனாய் தெரிகிறான்…

ஆண் : ராஜ்யமா இல்லை இமயமா…
ராஜ்யமா இல்லை இமயமா…


Notes : Rajayama Song Lyrics in Tamil. This Song from Baba (2002). Song Lyrics penned by Vaali. ராஜ்யமா பாடல் வரிகள்.


Scroll to Top