வானத்தை பார்த்தேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம்சந்திரபோஸ்மனிதன் (1987)

Vanaththai Parthen Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வானத்தை பார்த்தேன்…
பூமியை பார்த்தேன்…
மனுஷனை இன்னும் பார்க்கலையே…

—BGM—

ஆண் : வானத்தை பார்த்தேன்…
பூமியை பார்த்தேன்…
மனுஷனை இன்னும் பார்க்கலையே…
அட பல நாள் இருந்தேன் உள்ளே…
அந்த நிம்மதி இங்கில்லே…

ஆண் : உள்ள போன அத்தனை பேரும்…
குத்தவாளி இல்லீங்க…
வெளியே உள்ள அத்தனை பேரும்…
புத்தன் காந்தி இல்லீங்க…

ஆண் : வானத்தை பார்த்தேன்…
பூமியை பார்த்தேன்…
மனுஷனை இன்னும் பார்க்கலையே…

—BGM—

ஆண் : குரங்கிலிருந்து பிறந்தானா…
குரங்கை மனிதன் பெற்றானா…
யாரை கேள்வி கேட்பது…
டார்வின் இல்லையே…

ஆண் : கடவுள் மனிதனை படைத்தானா…
கடவுளை மனிதன் படைத்தானா…
ரெண்டு பேரும் இல்லையே…
ரொம்ப தொல்லையே…

ஆண் : அட நான் சொல்வது உண்மை…
இதை நீ நம்பினால் நன்மை…
அட நான் சொல்வது உண்மை…
இதை நீ நம்பினால் நன்மை…

ஆண் : வானத்தை பார்த்தேன்…
பூமியை பார்த்தேன்…
மனுஷனை இன்னும் பார்க்கலையே…
அட பல நாள் இருந்தேன் உள்ளே…
அந்த நிம்மதி இங்கில்லே…

—BGM—

ஆண் : சில நாள் இருந்தேன் கருவறையில்…
பல நாள் கிடந்தேன் சிறை அறையில்…
அம்மா என்னை ஈன்றது அமாவாசையாம்…

ஆண் : அதனால் பிறந்தது தொல்லையடா…
ஆனால் என் மனம் வெள்ளையடா…
பட்டபாடு யாவுமே பாடம்தானடா…

ஆண் : ஒரு பூந்தோட்டமா வாழ்க்கை…
இல்லை போராட்டமே வாழ்க்கை…
ஒரு பூந்தோட்டமா வாழ்க்கை…
ஹா… இல்லை போராட்டமே வாழ்க்கை…

ஆண் : வானத்தை பார்த்தேன்…
பூமியை பார்த்தேன்…
மனுஷனை இன்னும் பார்க்கலையே…
அட பல நாள் இருந்தேன் உள்ளே…
அந்த நிம்மதி இங்கில்லே…

ஆண் : உள்ள போன அத்தனை பேரும்…
குத்தவாளி இல்லீங்க…
வெளியே உள்ள அத்தனை பேரும்…
புத்தன் காந்தி இல்லீங்க…

ஆண் : வானத்தை பார்த்தேன்…
பூமியை பார்த்தேன்…
மனுஷனை இன்னும் பார்க்கலையே…
அட பல நாள் இருந்தேன் உள்ளே…
அந்த நிம்மதி இங்கில்லே…
அந்த நிம்மதி இங்கில்லே…


Notes : Vanaththai Parthen Song Lyrics in Tamil. This Song from Manithan (1987). Song Lyrics penned by Vairamuthu. வானத்தை பார்த்தேன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading