காளை காளை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ்.பி. சைலஜாசந்திரபோஸ்மனிதன் (1987)

Kaala Kaala Song Lyrics in Tamil


BGM

பெண் : காளை காளை…
முரட்டு காளை…

பெண் : முரட்டு காளை நீதானா…
போக்கிரி ராஜா நீதானா…
பாயும் புலியும் நீதானா…
பயந்து போவது சரிதானா…

பெண் : வாழ்வோமே ஒன்னோடு ஒன்னா…
வாலிபம் ஏங்குது எந்திரி கண்ணா…

BGM

ஆண் : காளை காளை…
முரட்டு காளை…

ஆண் : முரட்டு காளை நான்தாண்டி…
போக்கிரி ராஜா நான்தாண்டி…
பாயும் புலியும் நான்தாண்டி…
பயந்து போக மாட்டேன்டி…

ஆண் : நாடெல்லாம் என் பேரச் சொல்லும்…
நல்லவனுக்கு நல்லவன்தாண்டி…

BGM

பெண் : உள்காய்ச்சல் ஏறலையா…
உன் உள்ளம் மாறலையா…
பந்திக்கு அழைத்தேனே பசி இல்லையா…

ஆண் : நெஜமாத்தான் ஏங்குறியா…
நீ என்ன பொம்பளையா… ஹோய்…
என்னை விட்டா உனக்கேதும் வழி இல்லையா…

பெண் : அட மாமா அழலாமா…
நான் தாலி கட்டட்டா…

ஆண் : அடி மானே திமிர்தானே…
உன் கொட்டம் அடக்கிட கற்றவன் நானே…

பெண் : காளை காளை…
முரட்டு காளை…

ஆண் : ஆ… முரட்டு காளை நான்தாண்டி…
போக்கிரி ராஜா நான்தாண்டி…

பெண் : பாயும் புலியும் நீதானா…
பயந்து போவது சரிதானா…

ஆண் : நாடெல்லாம் என் பேர சொல்லும்…
நல்லவனுக்கு நல்லவன்தாண்டி…

BGM

பெண் : பொம்பளைய சேராம…
போய் சேர்ந்த ஆளுகளை…
கட்டையில தீ கூட தீண்டாதையா…

ஆண் : சேலைக்குள் தெரியாம…
சிக்கி விட்ட ஆம்பளைக்கு…
சொர்க்கத்தில் இடமேதும் கிடையாதமோய்…

பெண் : கிளிப்போல தோள் மேலே…
நான் ஏறி கொள்ளட்டா…

ஆண் : என்ன பெண்மை என்ன மென்மை…
உன் கற்பினை கண்டதும் கண்ணகி கெட்டா…

பெண் : காளை காளை…
என் முரட்டு காளை…

பெண் : முரட்டு காளை நீதானா…
போக்கிரி ராஜா நீதானா…
பாயும் புலியும் நீதானா…
பயந்து போவது சரிதானா…

பெண் : வாழ்வோமே ஒன்னோடு ஒன்னா…
வாலிபம் ஏங்குது எந்திரி கண்ணா…

ஆண் : காளை காளை…
ஆ… முரட்டு காளை…

ஆண் : முரட்டு காளை நான்தாண்டி…
போக்கிரி ராஜா நான்தாண்டி…
பாயும் புலியும் நான்தாண்டி…
பயந்து போக மாட்டேன்டி…

ஆண் : நாடெல்லாம் என் பேரச் சொல்லும்…
நல்லவனுக்கு நல்லவன்தாண்டி…

பெண் : காளை காளை…
முரட்டு காளை…


Notes : Kaala Kaala Song Lyrics in Tamil. This Song from Manithan (1987). Song Lyrics penned by Vairamuthu. காளை காளை பாடல் வரிகள்.


Scroll to Top