ராஜாதி ராஜா 

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & சுவர்ணலதாஇளையராஜாமன்னன்

Rajathi Raja Song Lyrics in Tamil


BGM

பெண் : ராஜாதி ராஜா உன் தந்திரங்கள்…
நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்…

ஆண் : மாயஜாலம் என்ன…
மையல் கொண்டு நீயும்…
நாளும் ஆட்டம் போடவா…

பெண் : நேரம் காலம் என்ன…
நேசம் கொண்டு நீயும்…
காதல் தோட்டம் போடவா…

ஆண் : ஹே… ராணி என்னோடு ஆடவா நீ…

பெண் : பூ மேனி கொண்டாடும் வெண்பனி…
எந்நாளும்… ராஜாத்தி ராஜா உன் தந்திரங்கள்…
நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்…

BGM

ஆண் : மான் கூட்டம் மீன் கூட்டம்…
வேடிக்கை பார்க்கின்ற…
கண்ணிரண்டிலே என்ன மயக்கம்…

BGM

பெண் : மாமாங்கம் ஆனாலும்…
மன்னா உன் மார்சேர்ந்து…
சின்ன மலர்தான் சிந்து படிக்கும்…

BGM

ஆண் : கையோடு கை சேரும்…
கல்யாண வைபோகம்…
கண்டு களிக்கும் காலம் பிறக்கும்…

பெண் : மேளசத்தம் கேட்பதெந்த தேதியோ…
குழு : லால லால லால லால லால லா…

ஆண் : தேவனுக்கு சொந்தம் இந்த தேவியோ…
குழு : லால லால லால லால லால லா…

பெண் : காதும் காதுமாய்…
ஆண் : காதல் மந்திரம்…
பெண் : ஓதுகின்ற மன்னன் அல்லவோ…
எந்நாளும் இங்கு…

பெண் : ராஜாதி ராஜா உன் தந்திரங்கள்…
நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்…

BGM

பெண் : நின்றாலும் சென்றாலும் பின்னோடு எந்நாளும்…
வந்த நிழலே வண்ண மயிலே…

BGM

ஆண் : தொட்டாலும் பட்டாலும் முத்தாரம் இட்டாலும்…
என்ன சுகமே என்ன சுவையே…

பெண் : உன்மேனி பொன்மேனி இந்நாளும் எந்நாளும்…
என்னை மயக்க தன்னை மறக்க…

ஆண் : ஓடைமீது ஓடம் போல ஆடவா…
குழு : லால லால லால லால லால லா…

பெண் : உன்னையன்றி யாரும் இல்லை ஆடவா…
குழு : லால லால லால லால லால லா…

ஆண் : காதல் கன்னிகை…
பெண் : காமன் பண்டிகை…
ஆண் : காணுகின்ற காலமல்லவா…
எந்நாளும் இங்கு…

பெண் : ராஜாதி ராஜா உன் தந்திரங்கள்…
நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்…

ஆண் : மாயஜாலம் என்ன…
மையல் கொண்டு நீயும்…
நாளும் ஆட்டம் போடவா…

பெண் : நேரம் காலம் என்ன…
நேசம் கொண்டு நீயும்…
காதல் தோட்டம் போடவா…

ஆண் : ஹே… ராணி என்னோடு ஆடவா நீ…
பெண் : பூ மேனி கொண்டாடும் வெண்பனி…
எந்நாளும்…

பெண் : ராஜாத்தி ராஜா உன் தந்திரங்கள்…
நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்…

ஆண் : ரூபாப்பா ராபாப்பா ராபபப்பா…
டுடு டுடு டுடுடுட்டு டுடுடு…


Notes : Rajathi Raja Song Lyrics in Tamil. This Song from Mannan (1992). Song Lyrics penned by Vaali. ராஜாதி ராஜா பாடல் வரிகள்.


Scroll to Top