அம்மா என்றழைக்காத

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.ஜே. யேசுதாஸ்இளையராஜாமன்னன்

Amma Endrazhaikatha Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அம்மா என்றழைக்காத உயிரில்லையே…
அம்மாவை வணங்காது உயர்வில்லையே…
அம்மா என்றழைக்காத உயிரில்லையே…
அம்மாவை வணங்காது உயர்வில்லையே…
நேரில் நின்று பேசும் தெய்வம்…
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது…

ஆண் : அம்மா என்றழைக்காத உயிரில்லையே…
அம்மாவை வணங்காது உயர்வில்லையே…

—BGM—

ஆண் : அபிராமி சிவகாமி கருமாரி மகமாயி…
திருக்கோயில் தெய்வங்கள் நீதானம்மா…
அன்னைக்கு அன்றாடம் அபிஷேகம் அலங்காரம்…
புரிகின்ற சிறுத்தொண்டன் நான்தானம்மா…

ஆண் : பொருளோடு புகழ் வேண்டும்…
மகனல்ல தாயே…
உன் அருள் வேண்டும் எனக்கென்றும்…
அது போதுமே…

ஆண் : அடுத்திங்கு பிறப்பொன்று…
அமைந்தாலும் நான் உந்தன்…
மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே…
அதை நீயே தருவாயே…

ஆண் : அம்மா என்றழைக்காத உயிரில்லையே…
அம்மாவை வணங்காது உயர்வில்லையே…

—BGM—

ஆண் : பசும் தங்கம் புது வெள்ளி…
மாணிக்கம் மணிவைரம்…
அவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா…

ஆண் : விலை மீது விலை வைத்துக்…
கேட்டாலும் கொடுத்தாலும்…
கடை தன்னில் தாயன்பு கிடைக்காதம்மா…

ஆண் : ஈரயைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி…
நீ பட்ட பெரும் பாடு அறிவேனம்மா…

ஆண் : ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும்…
உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா…
உன்னாலே பிறந்தேனே… ஏ…

ஆண் : அம்மா என்றழைக்காத உயிரில்லையே…
அம்மாவை வணங்காது உயர்வில்லையே…
நேரில் நின்று பேசும் தெய்வம்…
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது…

ஆண் : அம்மா என்றழைக்காத உயிரில்லையே…
அம்மாவை வணங்காது உயர்வில்லையே…
அம்மா என்றழைக்காத உயிரில்லையே…
அம்மாவை வணங்காது உயர்வில்லையே…


Notes : Amma Endru Song Lyrics in Tamil. This Song from Mannan (1992). Song Lyrics penned by Vaali. அம்மா என்றழைக்காத பாடல் வரிகள்.


Scroll to Top