பாடலாசிரியர் | பாடகர் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | ஏ.ஆர்.ரகுமான் | ஏ.ஆர்.ரகுமான் | வரலாறு |
Theeyil Vizhuntha Thaena Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஏஹ் ஏஹ் ஏஹ்…
ஏஹ் ஏஹ் ஏஹ்…
ஏஹ் ஏஹ் ஏஹ்…
—BGM—
ஆண் : தீயில் விழுந்த தேனா…
இவன் தீயில் வடிந்த தேனா…
தாயை காக்கும் மகனா…
இல்லை தாயும் ஆனவனா…
ஆண் : தீயில் விழுந்த தேனா…
இவன் தீயில் வடிந்த தேனா…
தாயை காக்கும் மகனா…
இல்லை தாயும் ஆனவனா…
ஆண் : மழையின் நீர் வாங்கி மலையே அழுவது போல்…
தாயின் உயிர் தாங்கி தனயன் அழுவானோ…
உயிரை தந்தவளின் உயிரை காப்பானா…
கடனை தீர்ப்பானா…
ஆண் : ஏஹ் ஏஹ் ஏஹ்…
ஏஹ் ஏஹ் ஏஹ்…
ஏஹ் ஏஹ் ஏஹ்…
ஆண் : தங்கம் போலே இருந்தவள்தான்…
சருகை போலே ஆனதனால்…
சிங்கம் போலே இருந்த மகன்…
செவிலியை போலே ஆவானா…
ஆண் : தீயில் விழுந்த தேனா…
இவன் தீயில் வடிந்த தேனா…
தாயை காக்கும் மகனா…
இல்லை தாயும் ஆனவனா…
—BGM—
ஆண் : ஓர் சொல்லில் ஓர் உலகம் அம்மா…
உலகெல்லாம் ஓர் சொல்லும் அம்மா…
ஓர் சொல்லில் ஓர் உலகம் அம்மா… அம்மா…
உலகெல்லாம் ஓர் சொல்லும் அம்மா…
ஆண் : நீ சுமந்த பிள்ளையாய் நான் இருந்தேன் அம்மா…
நான் சுமக்கும் பிள்ளையாய் நீ ஆனாய் அம்மா…
எனக்கு ஏதும் ஆனதுனா உனக்கு வேறு பிள்ளை உண்டு…
உனக்கு ஏதும் ஆனதுனா எனக்கு வேறு தாய் இருக்கா…
ஆண் : ஏஹ் ஏஹ் ஏஹ்…
ஏஹ் ஏஹ் ஏஹ்…
ஏஹ் ஏஹ் ஏஹ்…
ஆண் : நெஞ்சை ஊட்டி வளர்த்தவளை…
கண்ணில் மணியாய் சுமந்தவளை…
மண்ணில் விட்டு விடுவானா…
மனதில் மட்டும் சுமப்பானா…
ஆண் : தீயில் விழுந்த தேனா…
இவன் தீயில் வடிந்த தேனா…
தாயை காக்கும் மகனா…
இல்லை தாயும் ஆனவனா…
ஆண் : தாயின் மடிதானே உலகம் தொடங்கும் இடம்…
தாயின் காலடியே உலகம் முடியும் இடம்…
உயிரை தந்தவளின் உயிரை காப்பானா…
கடனை தீர்ப்பானா…
ஆண் : ஏஹ் ஏஹ் ஏஹ்…
ஏஹ் ஏஹ் ஏஹ்…
ஏஹ் ஏஹ் ஏஹ்…
ஆண் : கருணை தாயின் நினைவினிலே…
கல்லும் கொஞ்சம் அழுது விடும்…
கண்ணீர் துளிகள் விழுந்த பின்னே…
கண்ணின் மணியும் விழுந்துவிடும்…
ஆண் : தீயில் விழுந்த தேனா…
இவன் தீயில் வடிந்த தேனா…
தாயை காக்கும் மகனா…
இல்லை தாயும் ஆனவனா…
ஆண் : தீயில் விழுந்த தேனா…
இவன் தீயில் வடிந்த தேனா…
தாயை காக்கும் மகனா…
இல்லை தாயும் ஆனவனா…
இல்லை தாயும் ஆனவனா…
இல்லை தாயும் ஆனவனா…
Notes : Theeyil Vizhuntha Thaena Song Lyrics in Tamil. This Song from Varalaru (2006). Song Lyrics penned by Vairamuthu. தீயில் விழுந்த தேனா பாடல் வரிகள்.