ராசிதான் கை ராசிதான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராதேவாஎன் ஆசை மச்சான்

Raasithan Kai Raasithan Song Lyrics in Tamil


பெண் : ராசிதான் கை ராசிதான்…
உன் முகமே ராசிதான்…

—BGM—

பெண் : ராசிதான் கை ராசிதான்…
உன் முகமே ராசிதான்…
ராசிதான் கை ராசிதான்…
உன் முகமே ராசிதான்…

பெண் : ஆத்தாடி உன் அருமையும் பெருமையும்…
அறிஞ்சவ இவதான் தெரியாதா…
பூச்சூடி உன் நெனப்புல மிதப்புல…
இருப்பவ இவதான் புரியாதா…

பெண் : எந்நாளுமே என் ஆசை மச்சானே…
உன் கூடதான் நான் இருப்பேன்…
உன் துணையாக நல்ல இணையாக…
என்றும் வாழப் பிறந்தேனே…

பெண் : ராசிதான் கை ராசிதான்…
உன் முகமே ராசிதான்…

ஆண் : ராசிதான் கை ராசிதான்…
உன் முகமே ராசிதான்…

—BGM—

பெண் : ஊர்சனம் வாழ்த்தும் ராசகுமரன்…
உனக்கு ஒரு குறையேது…
மாமன் இல்லாத பூமியின் மீது…
எனக்கு ஒரு துணை ஏது…

ஆண் : கண்டாங்கி புடவை கொண்டாடும் நிலாவ…
கையோடு அணைச்சேனே…
என் பேரை மறந்து உன் பேரைத்தானே…
எப்போதும் நினைச்சேனே…

பெண் : பனி பூப்போல் சிரிக்குது…
பால் போல் இருக்குது…
பாவை மனம்தானே…

ஆண் : ராசிதான் கை ராசிதான்…
உன் முகமே ராசிதான்…

பெண் : ராசிதான் கை ராசிதான்…
உன் முகமே ராசிதான்…

—BGM—

ஆண் : வீசுற காத்தும் வயல் வெளி நாத்தும்…
படிக்குது எசப் பாட்டு…
ஆண்கிளி மனசும் பூங்கிளி மனசும்…
துடிக்குது அதைக் கேட்டு…

பெண் : ஒன்னாக கலந்து சந்தோஷ உறவு…
எந்நாளும் விலகாது…
கண்ணாடி போலே கல்லால அடிச்சா…
தண்ணீரும் உடையாது…

ஆண் : பட்டு பாய போட்டது…
பன்னீர் தூவுது…
பூக்கள் நமக்காக…

பெண் : ராசிதான் கை ராசிதான்…
உன் முகமே ராசிதான்…

ஆண் : ராசிதான் கை ராசிதான்…
உன் முகமே ராசிதான்…

பெண் : ஆத்தாடி…
ஆண் : உன் அருமையும் பெருமையும் அறிஞ்சவன்…
இவன்தான் தெரியாதா…

பெண் : பூச்சூடி…
ஆண் : உன் நெனப்புல மிதப்புல இருப்பவன்…
இவன்தான் புரியாதா…

பெண் : எந்நாளுமே என் ஆசை மச்சானே…
ஆண் : ம்ம்ம்… ம்ம்ம்…
பெண் : உன் கூடத்தான் நான் இருப்பேன்…
உன் துணையாக நல்ல இணையாக…
என்றும் வாழப் பிறந்தேனே…

ஆண் & பெண் : ராசிதான் கை ராசிதான்…
உன் முகமே ராசிதான்…
ராசிதான் கை ராசிதான்…
உன் முகமே ராசிதான்…

—BGM—


Notes : Raasithan Kai Raasithan Song Lyrics in Tamil. This Song from En Aasai Machan (1994). Song Lyrics penned by Vaali. ராசிதான் கை ராசிதான் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading