மலரோடு மலரிங்கு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசுஜாதா மோகன்ஏ. ஆர். ரகுமான்பம்பாய்

Malarodu Malaringu Song Lyrics in Tamil


BGM

பெண் : மலரோடு மலரிங்கு மகிழ்ந்தாடும் போது…
மனதோடு மனமின்று பகை கொள்வதேனோ…
மதம் என்னும் மதம் ஓயட்டும்…
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்…

பெண் : மலரோடு மலரிங்கு மகிழ்ந்தாடும் போது…
மனதோடு மனமின்று பகை கொள்வதேனோ…
மதம் என்னும் மதம் ஓயட்டும்…
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்…

குழு : வழிகின்ற கண்ணீரில் இனம் இல்லையே…
உதிரத்தின் நிறம் இங்கு வேறில்லையே…
வழிகின்ற கண்ணீரில் இனம் இல்லையே…
உதிரத்தின் நிறம் இங்கு வேறில்லையே…
காற்றுக்கு திசை இல்லை தேசம் இல்லை…

பெண் : மனதோடு மனம் சேரட்டும்…

குழு : மலரோடு மலரிங்கு மகிழ்ந்தாடும் போது…
மனதோடு மனமின்று பகை கொள்வதேனோ…
மதம் என்னும் மதம் ஓயட்டும்…
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்…

குழு : துளி எல்லாம் கை கோர்த்து கடல் ஆகட்டும்…
கடலோடு கடல் சேரட்டும்…
துகள் எல்லாம் ஒன்றாகி மலை ஆகட்டும்…
விண்ணோடு விண் சேரட்டும்…
விடியாத இரவொன்றும் வானில் இல்லை…
ஒளியோடு ஒளி சேரட்டும்…

BGM


Notes : Malarodu Malaringu Song Lyrics in Tamil. This Song from Bombay (1995). Song Lyrics penned by Vairamuthu. மலரோடு மலரிங்கு பாடல் வரிகள்.


Scroll to Top