புதிய மனிதா

பாடலாசிரியர்(கள்)பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஏ.ஆர்.ரகுமான், எஸ்.பி. பாலசுப்ரமணியம் & கதீஜா ரகுமான்ஏ.ஆர்.ரகுமான்எந்திரன்

Puthiya Manidha Song Lyrics in Tamil


—BGM—

குழு : புதிய மனிதா பூமிக்கு வா…
புதிய மனிதா பூமிக்கு வா…

—BGM—

ஆண் : எக்கை வார்த்து சிலிக்கான் சேர்த்து…
வயரூட்டி உயிரூட்டி ஹார்ட் டிஸ்கில் நினைவூட்டி…

ஆண் : அழியாத உடலோடு வடியாத உயிரோடு…
ஆறாம் அறிவை அரைத்து ஊற்றி…
ஏழாம் அறிவை எழுப்பும் முயற்சி…

ஆண் : புதிய மனிதா பூமிக்கு வா…

குழு : புதிய மனிதா பூமிக்கு வா…
புதிய மனிதா பூமிக்கு வா…

பெண் : மாற்றம் கொண்டு வா…
மனிதனை மேன்மை செய்…
உனது ஆற்றலால் உலகை மாற்று…

பெண் : எல்லா உயிர்க்கும் நன்மையாயிரு…
எந்த நிலையிலும் உண்மையாயிரு…

—BGM—

ஆண் : எந்திரா எந்திரா எந்திரா என் எந்திரா…
எந்திரா எந்திரா எந்திரா என் எந்திரா…

ஆண் : நான் கண்டது ஆறறிவு…
நீ கொண்டது பேரறிவு…
நான் கற்றது ஆறுமொழி…
நீ பெற்றது நூறுமொழி…

ஆண் : ஈரல் கணையம் துன்பமில்லை…
இதயக்கோளாறு ஏதுமில்லை…
தந்திர மனிதன் வாழ்வதில்லை…
எந்திரன் வீழ்வதில்லை…

—BGM—

ஆண் : கருவில் பிறந்த எல்லாம் மரிக்கும்…
அறிவில் பிறந்தது மரிப்பதே இல்லை…
இதோ என் எந்திரன் இவன் அமரன்…
இதோ என் எந்திரன் இவன் அமரன்…

ஆண் : நான் இன்னொரு நான்முகனே…
நீ என்பவன் என் மகனே…
ஆண் பெற்றவன் ஆண் மகனே…
ஆம் உன் பெயர் எந்திரனே… ஹே ஹே ஹே…

குழு : புதிய மனிதா பூமிக்கு வா…
புதிய மனிதா பூமிக்கு வா…
புதிய மனிதா பூமிக்கு வா…

—BGM—

ஆண் : நான் என்பது அறிவு மொழி…
ஏன் என்பது எனது வழி…
வான் போன்றது எனது வெளி…
நான் நாளைய ஞான ஒளி…

ஆண் : நீ கொண்டது உடல் வடிவம்…
நான் கொண்டது பொருள் வடிவம்…
நீ கண்டது ஒரு பிறவி…
நான் காண்பது பல பிறவி…

—BGM—

ஆண் : ரோபோ ரோபோ பன்மொழிகள் கற்றாலும்…
என் தந்தை மொழி தமிழ் அல்லவா…
ரோபோ ரோபோ பல கண்டம் வென்றாலும்…
என் கர்த்தாவுக்கு அடிமை அல்லவா… ஆஹா ஆஆ ஆஆ…

குழு : புதிய மனிதா பூமிக்கு வா…
புதிய மனிதா பூமிக்கு வா…
புதிய மனிதா பூமிக்கு வா…
புதிய மனிதா பூமிக்கு வா…


Notes : Puthiya Manidha Song Lyrics in Tamil. This Song from Enthiran (2010). Song Lyrics penned by Vairamuthu. புதிய மனிதா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading