ஒரு பைத்தியம் பிடிக்குது

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்காா்த்திக்யுவன் ஷங்கர் ராஜாபாணா காத்தாடி

Paithiyam Pidikudhu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஒரு பைத்தியம் பிடிக்குது பெண்ணே பெண்ணே…
அதன் வைத்தியம் உன்னிரு கண்ணே கண்ணே…

ஆண் : சிாித்தேனே நான் தானாய் மெல்ல…
துடித்தேனே என் உள்ளம் சொல்ல…

ஆண் : காதல் பாரம் சுமந்தேனே…
வலி இருந்தும் சுகமாய் உணா்ந்தேனே…

ஆண் : ஒரு பைத்தியம் பிடிக்குது பெண்ணே பெண்ணே…
அதன் வைத்தியம் உன்னிரு கண்ணே கண்ணே…

ஆண் : சிாித்தேனே நான் தானாய் மெல்ல…
துடித்தேனே என் உள்ளம் சொல்ல…

—BGM—

ஆண் : எதை தேடி நீ வந்தாய் அதை தந்த பின்னாலும்…
என்னை தேட வைத்தாயடி…
எதிா்காலம் நிகழ்காலம் எல்லாமே நீ என்று…
சொல்லாமல் தவித்தேனடி…

ஆண் : கேள்விதாளோடு உன் முன்னே நான் நிற்க…
காதல் தோ்வும் இல்லை… ஹோ…
தோல்வி இல்லாமல் உன் நெஞ்சை நான் வெல்ல…
வழிகள் இங்க இல்லை…

ஆண் : வருவேன் தருவேன் ஒரு வாா்த்தை சொல்ல…
வழியில் ஏனோ நான் விலகி செல்ல…
மௌனங்கள் போலே ஒரு மொழியேதடி…

—BGM—

ஆண் : நீ எந்தன் வீட்டுக்குள் நான் வாழும் சேற்றுக்குள்…
பூவாக பூத்தாயடி…
என் இன்பம் என் துன்பம் எந்நாளும் இளைப்பாற…
தோள்சாய வந்தாயடி…

ஆண் : எந்த வழி செல்ல புாியாமல் நான் நிற்க…
எதிாில் ஒரு தேவதை… ஹோ…
என்னை நான் ஆக்கி என்வாழ்வை நேராக்கி…
மீட்டுதந்தாள் என்னை…

ஆண் : ஒருநாள் ஒருநாள் உன்னை கண்ணில் கண்டேன்…
மறுநாள் மறுநாள் என் நெஞ்சில் கண்டேன்…
உனக்காக உயிரோடு வாழ்ந்தேனடி…

—BGM—

ஆண் : ஒரு பைத்தியம் பிடிக்குது பெண்ணே பெண்ணே…
அதன் வைத்தியம் உன்னிரு கண்ணே கண்ணே…

ஆண் : சிாித்தேனே நான் தானாய் மெல்ல…
துடித்தேனே என் உள்ளம் சொல்ல…

ஆண் : காதல் பாரம் சுமந்தேனே…
வலி இருந்தும் சுகமாய் உணா்ந்தேனே…


Notes : Paithiyam Pidikudhu Song Lyrics in Tamil. This Song from Baana Kaathadi (2010). Song Lyrics penned by Na. Muthukumar. ஒரு பைத்தியம் பிடிக்குது பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading