என் நெஞ்சில்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சாதனா சர்கம்யுவன் ஷங்கர் ராஜாபாணா காத்தாடி

En Nenjil Song Lyrics in Tamil


BGM

பெண் : என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது…
அதன் போ் என்னவென கேட்டேன்…
என் கண்ணில் ஒரு தீ வந்தது…
அதன் போ் என்னவென கேட்டேன்…

பெண் : என்ன அது இமைகள் கேட்டது…
என்ன அது இதயம் கேட்டது…
காதல் என உயிரும் சொன்னதன்பே…
காதல் என உயிரும் சொன்னதன்பே…

பெண் : என் பெயரில் ஒரு போ் சோ்ந்தது…
அந்த போ் என்னவென கேட்டேன்…
என் தீவில் ஒரு கால் வந்தது…
அந்த ஆள் எங்கு என கேட்டேன்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : கண்டுபிடி உள்ளம் சொன்னது…
உன்னிடத்தில் உருகி நின்றது…
காதல் இது உயிரும் சொன்னதன்பே…
காதல் இது உயிரும் சொன்னதன்பே…

BGM

பெண் : சில நேரத்தில் நம் பார்வைகள்…
தவறாகவே எடை போடுமே…
மழை நேரத்தில் விழி ஓரத்தில்…
இருளாகவே ஒளி தோன்றுமே…

பெண் : இதயம் எடை போடவே…
இதயம் தடையாய் இல்லை…
புரிந்ததும் வருந்தினேன் உன்னிடம்…
என்னை நீ மாற்றினாய்…
எங்கும் நிறம் பூட்டினாய்…
என் மனம் இல்லையே என்னிடம்…

பெண் : என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது…
அதன் போ் என்னவென கேட்டேன்…
என் கண்ணில் ஒரு தீ வந்தது…
அதன் போ் என்னவென கேட்டேன்…

BGM

பெண் : உன்னை பார்த்ததும் அந்நாளிலே…
காதல் நெஞ்சில் வரவே இல்லை…
எதிர்காற்றிலே குடை போலவே…
சாய்ந்தேன் இன்று எழவே இல்லை…

பெண் : இரவில் உறக்கம் இல்லை…
பகலில் வெளிச்சம் இல்லை…
காதலில் கரைவதும் ஒரு சுகம்…
எதற்கு பார்த்தேன் என்று இன்று புரிந்தேனடா…
என்னை நீ ஏற்றுக்கொள் முழுவதும்…

பெண் : என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது…
அதன் போ் என்னவென கேட்டேன்…
என் கண்ணில் ஒரு தீ வந்தது…
அதன் போ் என்னவென கேட்டேன்…

பெண் : என்ன அது இமைகள் கேட்டது…
என்ன அது இதயம் கேட்டது…
காதல் என உயிரும் சொன்னதன்பே…
காதல் என உயிரும் சொன்னதன்பே…

BGM

பெண் : காதல் இது உயிரும் சொன்னதன்பே…
காதல் இது உயிரும் சொன்னதன்பே…


Notes : En Nenjil Song Lyrics in Tamil. This Song from Baana Kaathadi (2010). Song Lyrics penned by Na. Muthukumar. என் நெஞ்சில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading