புன்னகையே புயலாய்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசுந்தரய்யர்ஜிப்ரான்க/பெ.ரணசிங்கம்

Punnagaiye Song Lyrics in Tamil


BGM
குழு (ஆண்கள்) : புன்னகையே…
சிறு பூங்கிளியே…

குழு (ஆண்கள்) : புன்னகையே…
புயலாய் மாறும்போது…
சிறு பூங்கிளியே…
புலியாய் நீயும் மாறு…

குழு (ஆண்கள்) : புலி நீ… நீ…
புயல் நீ… நீ…
விதியா… ஆ… ஆ…
சாதியா… ஆ… ஆ…

குழு (ஆண்கள்) : அதிகாரத்தின் மீது…
அடியே நீயும் மோது…
சிறு வேர் முட்டும்போது…
கரும்பாறைத் தாங்காது…

குழு (ஆண்கள்) : புன்னகையே…
புயலாய் மாறும்போது…
சிறு பூங்கிளியே…
புலியாய் நீயும் மாறு…

BGM

ஆண் : துணை ஒன்னு இல்லாமலே…
ஒத்த உசுரு அலைமோதுதே…
எரியுற காட்டுக்குள்ளே…
ஒரு எறும்பு வழி தேடுதே…

ஆண் : பட்டிக்காட்டுப் பொண்ணு சொல்லு…
பார்லிமென்டில் கேட்குமா…
காட்டுச் சிங்கம் முயலக் காக்க…
கடிதம் கொடுக்குமா…

ஆண் : கஞ்சி போட்ட காக்கிச் சட்டை…
கைத்தறிய பாக்குமா…
வேலு நாச்சி வம்சக்காரி…
வீரம் போகுமா…

ஆண் : துணிஞ்ச தீ இது…
குனிஞ்சு எரியுமா…

ஆண் : புன்னகையே…
புயலாய் மாறும்போது…
சிறு பூங்கிளியே…
புலியாய் நீயும் மாறு…

குழு (ஆண்கள்) : புலி நீ… நீ…
புயல் நீ… நீ…
விதியா… ஆ… ஆ…
சாதியா… ஆ… ஆ…

குழு (ஆண்கள்) : அதிகாரத்தின் மீது…
அடியே நீயும் மோது…
சிறு வேர் முட்டும்போது…
கரும்பாறைத் தாங்காது…

ஆண் & குழு (ஆண்கள்) : புன்னகையே…

ஆண் : புயலாய் மாறும்போது…

ஆண் & குழு (ஆண்கள்) : சிறு பூங்கிளியே…

ஆண் : புலியாய் நீயும் மாறு…

BGM

ஆண் : இலக்கை அடையாமலே…
இவள் இதயம் அடங்காதடா…
விலங்கு உடையாமலே…
இவள் வளையல் உடையாதடா…

ஆண் : இவளும் கூட இந்திய ரத்தம்…
அரசமைப்பு சொல்லுது…
ஈ எறும்பும் வாழத்தானே…
பூமி உள்ளது…

ஆண் : அருங்கம்புல்லும் நனைய தானே…
அந்த மேகம் பெய்யுது…
அழுத ஜாதி மீளத் தானே…
அரசு உள்ளது…
அழுத பிள்ளைதான்…
பால் குடிக்குது…

குழு (ஆண்கள்) : புன்னகையே…

ஆண் : புயலாய் மாறும்போது…

குழு (ஆண்கள்) : சிறு பூங்கிளியே…

ஆண் : புலியாய் நீயும் மாறு…

ஆண் & குழு (ஆண்கள்) : புலி நீ… நீ…
புயல் நீ… நீ…
விதியா… ஆ… ஆ…
சாதியா… ஆ… ஆ…

ஆண் : அதிகாரத்தின் மீது…
அடியே நீயும் மோது…
சிறு வேர் முட்டும்போது…
கரும்பாறை தாங்காது…

ஆண் & குழு (ஆண்கள்) : புன்னகையே…
புயலாய் மாறும்போது…
சிறு பூங்கிளியே…
புலியாய் நீயும் மாறு…


Notes : Punnagaiye Song Lyrics in Tamil. This Song from Ka Pae Ranasingam (2020). Song Lyrics penned by Vairamuthu. புன்னகையே பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top