பாடலாசிரியர் | பாடகர் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | மணிகண்டன் பெரும்படப்பு | ஜிப்ரான் | க/பெ.ரணசிங்கம் |
Paravaigala Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : பறவைகளா… பறவைகளா…
பசியெடுத்த பறவைகளா…
பாழ்வெளியில் இறை தேடும்…
பாலைவன பறவைகளா…
ஆண் : உறவெல்லாம் வயிறு வளக்கவே…
உயிரை விக்க போனீங்களா…
உள்ளூரு ஆட்ட வித்துதான்…
ஒட்டகத்த மேச்சீகளா…
கண்ணீரில் சொந்தம் பொலம்புதே…
கடல் தண்டி கேட்கும் தானா…
ஆண் : பறவைகளா… பறவைகளா…
பசியெடுத்த பறவைகளா…
பாழ்வெளியில் இறை தேடும்…
பாலைவன பறவைகளா…
—BGM—
ஆண் : நதி இல்லாத ஊரை…
விட்டு… ஓடி வந்தீக…
மழை இல்லாத நாடு தேடி…
வாழ வந்தீக…
ஆண் : பாலும் தேனும் ஓடும் என்று…
பாலை வந்தீக…
ஈச்ச மரத்தில் வேப்பங்காயே…
காய்க்கக் கண்டீக…
ஆண் : பொண்டு புள்ள காங்காம…
கண்ணு ஏங்குதே…
வந்த வேலை தீராம வயசாகுதே…
தொலைகாட்சியில் ஊர்…
பார்க்கையில் உயிர் தேயுதே…
ஆண் : பறவைகளா… பறவைகளா…
பசியெடுத்த பறவைகளா…
பாழ்வெளியில் இறை தேடும்…
பாலைவன பறவைகளா…
ஆண் : உறவெல்லாம் வயிறு வளக்கவே…
உயிரை விக்க போனீங்களா…
உள்ளூரு ஆட்ட வித்துதான்…
ஒட்டகத்த மேச்சீகளா…
கண்ணீரில் சொந்தம் பொலம்புதே…
கடல் தண்டி கேட்கும் தானா…
ஆண் : பறவைகளா… பறவைகளா…
பசியெடுத்த பறவைகளா…
பாழ்வெளியில் இறை தேடும்…
பாலைவன பறவைகளா…
—BGM—
ஆண் : சொந்த ஊரில் சொந்த பந்தம்…
சோந்து நிக்குதுக…
போன உசுரு வாரதெப்போ…
பொலம்பி நிக்குதுக…
ஆண் : வீட்டுக்காரன் வேட்டி சட்டைய…
நீவி பாக்குதுக…
புள்ளை எல்லாம் பொம்மையோட…
பேசி பாக்குதுக…
ஆண் : வாழ்ந்த பூமி தொரத்தலையே…
வறுமை தொரத்துதே…
கடல் தண்ணி பிரிக்கலையே…
காசு பிரிக்குதே…
காகம் போகுது மேகம் போகுது…
நாங்க போவோமா…
ஆண் : பறவைகளா… பறவைகளா…
பசியெடுத்த பறவைகளா…
பாழ்வெளியில் இறை தேடும்…
பாலைவன பறவைகளா…
ஆண் : உறவெல்லாம் வயிறு வளக்கவே…
உயிரை விக்க போனீங்களா…
உள்ளூரு ஆட்ட வித்துதான்…
ஒட்டகத்த மேச்சீகளா…
கண்ணீரில் சொந்தம் பொலம்புதே…
கடல் தண்டி கேட்கும் தானா…
ஆண் : பறவைகளா… பறவைகளா…
பசியெடுத்த பறவைகளா…
பாழ்வெளியில் இறை தேடும்…
பாலைவன பறவைகளா…
—BGM—
Notes : Paravaigala Song Lyrics in Tamil. This Song from Ka Pae Ranasingam (2020). Song Lyrics penned by Vairamuthu.