புன்னகை பூக்கள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
செங்கதிர்வாணன்பிரபாகர்சிவபுராணம் டி.வி. ரமணிபக்தி பாடல்கள்

Punnagai Pookkal Song Lyrics in Tamil


BGM

ஆண் : புன்னகை பூக்கள் பூத்திடும் பாபா…
பொன்மலர் பாதம் பணிந்தோம் பாபா…
அன்னையை போலே காத்திடும் பாபா…
சர்வேஸ்வரனே சாயி பாபா…
குழு : சர்வேஸ்வரனே சாயி பாபா…

ஆண் : மந்திரமானது உன் பெயர் பாபா…
மனக்குறை நீக்கும் மகத்துவம் பாபா…
ஜென்மங்கள் யாவிலும் துணை நீ பாபா…
சர்வேஸ்வரனே சாயி பாபா…
குழு : சர்வேஸ்வரனே சாயி பாபா…

ஆண் : மௌனத்தின் மொழியாய் பேசிடும் பாபா…
மன்னுயிர்க்கெல்லாம் தலைவன் பாபா…
பௌர்ணமி நிலவாய் ஒளி தரும் பாபா…
சர்வேஸ்வரனே சாயி பாபா…
குழு : சர்வேஸ்வரனே சாயி பாபா…

ஆண் : திவ்ய மூர்த்திகள் வடிவே பாபா…
தீவினை அகற்றும் திருவே பாபா…
கவ்விய பாவம் நீக்கிடும் பாபா…
சர்வேஸ்வரனே சாயி பாபா…
குழு : சர்வேஸ்வரனே சாயி பாபா…

ஆண் : சிரடி மண்ணில் தோன்றிய பாபா…
செய்தாய் பற்பல அற்புதம் பாபா…
பூவடி தந்து அருள்வாய் பாபா…
சர்வேஸ்வரனே சாயி பாபா…
குழு : சர்வேஸ்வரனே சாயி பாபா…

ஆண் : தாய்மடி தேடி தவித்தோம் பாபா…
தாங்கிட வந்தாய் நீயே பாபா…
ஆதரவான உறவே பாபா…
சர்வேஸ்வரனே சாயி பாபா…
குழு : சர்வேஸ்வரனே சாயி பாபா…

ஆண் : பரம்பொருள் நீயென அறிந்தோம் பாபா…
பக்தியில் உன்னைத் தொழுதோம் பாபா…
கரங்களை நீட்டி காத்திடும் பாபா…
சர்வேஸ்வரனே சாயி பாபா…
குழு : சர்வேஸ்வரனே சாயி பாபா…

ஆண் : தடைகளை நீக்கும் பேரரருள் பாபா…
தன்னிகரில்லா எங்களின் பாபா…
இடர்களை களையும் வளம் தரும் பாபா…
சர்வேஸ்வரனே சாயி பாபா…
குழு : சர்வேஸ்வரனே சாயி பாபா…

ஆண் : குழந்தை உள்ளம் கொண்டாய் பாபா…
குறைகளை நீக்கும் குருவே பாபா…
நிழல் தரும் மரமாய் நின்றாய் பாபா…
சர்வேஸ்வரனே சாயி பாபா…
குழு : சர்வேஸ்வரனே சாயி பாபா…

ஆண் : விழுந்திடும் விதையாய் விளங்கிடும் பாபா…
விதை விடும் பயிராய் பயன் தரும் பாபா…
எழுந்திடும் கதிராய் சுடர்விடும் பாபா…
சர்வேஸ்வரனே சாயி பாபா…
குழு : சர்வேஸ்வரனே சாயி பாபா…

ஆண் : நீரினில் தீபம் ஏற்றிய பாபா…
நெஞ்சினில் உன்னை வைத்தோம் பாபா…
நேரிடும் துன்பம் நீக்கிடும் பாபா…
சர்வேஸ்வரனே சாயி பாபா…
குழு : சர்வேஸ்வரனே சாயி பாபா…

ஆண் : பூரணமான அருளே பாபா…
பூமியை காத்திட வந்தாய் பாபா…
யார் உன்னை போற்றிலும் வளம் தரும் பாபா…
சர்வேஸ்வரனே சாயி பாபா…
குழு : சர்வேஸ்வரனே சாயி பாபா…

ஆண் : ஆயிரம் யுகங்கள் வாழ்ந்திடும் பாபா…
அடியவர் கெல்லாம் நலம் தரும் பாபா…
தாமரை பூவாய் சிரித்திடும் பாபா…
சர்வேஸ்வரனே சாயி பாபா…
குழு : சர்வேஸ்வரனே சாயி பாபா…

ஆண் : வாழ்வினில் உன்னை வணங்கிட பாபா…
வரும் வினையாவும் போக்கிடும் பாபா…
தாழ்வுகள் அகன்றிட செய்திடும் பாபா…
சர்வேஸ்வரனே சாயி பாபா…
குழு : சர்வேஸ்வரனே சாயி பாபா…

ஆண் : காலையில் விழித்ததும் உன் முகம் பாபா…
காண்போம் ஒவ்வொரு நாளும் பாபா…
பாலேனும் உள்ளம் படைத்தவர் பாபா…
சர்வேஸ்வரனே சாயி பாபா…
குழு : சர்வேஸ்வரனே சாயி பாபா…

ஆண் : நாளைய பொழுதை நலமாய் பாபா…
நடத்திட அருளும் இறைவா பாபா…
தாழ் பணிந்தோமே அன்புடன் பாபா…
சர்வேஸ்வரனே சாயி பாபா…
குழு : சர்வேஸ்வரனே சாயி பாபா…

ஆண் : உதி நீர் நோய்களை போக்கிடும் பாபா…
உலகோர் போற்றிடும் பகவான் பாபா…
நீதியை மண்ணில் காத்திடும் பாபா…
சர்வேஸ்வரனே சாயி பாபா…
குழு : சர்வேஸ்வரனே சாயி பாபா…

ஆண் : சோதனை ஆயிரம் நீக்கிடும் பாபா…
சுந்தர வடிவாய் தோன்றிடும் பாபா…
சாதனை புரிந்திட துணை வரும் பாபா…
சர்வேஸ்வரனே சாயி பாபா…
குழு : சர்வேஸ்வரனே சாயி பாபா…

ஆண் : எளியவர் கெல்லாம் எளியோன் பாபா…
ஏற்றம் வாழ்வில் தந்திடும் பாபா…
தலைமுறை காக்கும் தயாபரி பாபா…
சர்வேஸ்வரனே சாயி பாபா…
குழு : சர்வேஸ்வரனே சாயி பாபா…

ஆண் : நிலைத் தரும் நிம்மதி நின்பதம் பாபா…
நினைவுகள் எல்லாம் உன் வாசம் பாபா…
சலனத்தை வெல்லும் சக்தியே…
சர்வேஸ்வரனே சாயி பாபா…
குழு : சர்வேஸ்வரனே சாயி பாபா…

ஆண் : சுடு மணல் பாறையில் நிழல் தரும் பாபா…
சுழ்ந்திடும் இருளை விளக்கிடும் பாபா…
கடலென கருணை கொண்டாய் பாபா…
சர்வேஸ்வரனே சாயி பாபா…
குழு : சர்வேஸ்வரனே சாயி பாபா…

ஆண் : விடை தெரியாத விளக்கம் பாபா…
விண்ணும் மண்ணும் ஆழ்வது பாபா…
சடைமுடி சிவனாய் வந்தாய் பாபா…
சர்வேஸ்வரனே சாயி பாபா…
குழு : சர்வேஸ்வரனே சாயி பாபா…

ஆண் : அடைமழை நாளில் குடையாய் பாபா…
அன்பரைக் காத்திட வருவாய் பாபா…
சரணடைந்தொமே உன்னிடம் பாபா…
சர்வேஸ்வரனே சாயி பாபா…
குழு : சர்வேஸ்வரனே சாயி பாபா…

ஆண் : இமயத்தை போலே உயர்ந்தாய் பாபா…
இதயத்தில் நீயே நிறைந்தாய் பாபா…
சமயத்தில் வந்து உதவிடும் பாபா…
சர்வேஸ்வரனே சாயி பாபா…

குழு : சர்வேஸ்வரனே சாயி பாபா…
சர்வேஸ்வரனே சாயி பாபா…
சர்வேஸ்வரனே சாயி பாபா…


Notes : Punnagai Pookkal Song Lyrics in Tamil. This Song from Sai Baba Songs. Song Lyrics penned by Senkathirvanan. புன்னகை பூக்கள் பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top