புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன்எம்.எஸ்.விஸ்வநாதன்கிருஷ்ணன் பாடல்கள்

Pullanguzhal Kodutha Moongigale Song Lyrics in Tamil

BGM

ஆண் : புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே…
எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்…

ஆண் : புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே…
எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்…
வண்டாடும் கங்கை மலர் தோட்டங்களே…
எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களேன்…
வண்டாடும் கங்கை மலர் தோட்டங்களே…
எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களேன்…

ஆண் : புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே…
எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : பன்னீர் மலர் சொரியும் மேகங்களே…
எங்கள் பரந்தாமன் மெய்யழகை பாடுங்களேன்…

ஆண் : பன்னீர் மலர் சொரியும் மேகங்களே…
எங்கள் பரந்தாமன் மெய்யழகை பாடுங்களேன்…
தென்கோடி தென்றல் தரும் ராகங்களே…
எங்கள் ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி புகழ் பாடுங்களேன்…
எங்கள் ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி புகழ் பாடுங்களேன்…

ஆண் : புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே…
எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்…

BGM

ஆண் : குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன்…
ஒரு கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்…

ஆண் : குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன்…
ஒரு கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்…
திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன்…
அந்த ஸ்ரீ ரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்…
அந்த ஸ்ரீ ரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்…

ஆண் : புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே…
எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்…

BGM

ஆண் : பாஞ்சாலி புகழ் காக்க தன் கை கொடுத்தான்…
அந்த பாரதப்போர் முடிக்க சங்கை எடுத்தான்…
பாஞ்சாலி புகழ் காக்க தன் கை கொடுத்தான்…
அந்த பாரதப்போர் முடிக்க சங்கை எடுத்தான்…

ஆண் : பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கை கொடுத்தான்…
நாம் படிப்பதற்கு கீதை எனும் பாடம் கொடுத்தான்…
நாம் படிப்பதற்கு கீதை எனும் பாடம் கொடுத்தான்…

ஆண் : புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே…
எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்…
வண்டாடும் கங்கை மலர் தோட்டங்களே…
எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களேன்…

ஆண் : புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே…
எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்…

BGM

Notes : Pullanguzhal Kodutha Moongigale Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Kannadasan. புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading