கோபியரே கோபியரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
கண்ணதாசன்L.R. ஈஸ்வரிஎம்.எஸ்.விஸ்வநாதன்கிருஷ்ணன் பாடல்கள்

Gopiyare Gopiyare Song Lyrics in Tamil


BGM

பெண் : கோபியரே கோபியரே…
கொஞ்சும் இளம் வஞ்சியரே…
கோவிந்தன் பேரைச் சொல்லி…
கும்மி கொட்டி ஆடுங்களே…

குழு : கோவிந்தன் பேரைச் சொல்லி…
கும்மி கொட்டி ஆடுங்களே…

BGM

பெண் : கோபியரே கோபியரே…
கொஞ்சும் இளம் வஞ்சியரே…
கோவிந்தன் பேரைச் சொல்லி…
கும்மி கொட்டி ஆடுங்களே…

குழு : கோவிந்தன் பேரைச் சொல்லி…
கும்மி கொட்டி ஆடுங்களே…

பெண் : வேங்கடத்து மலைதனிலே வெண்முகிலாய் மாறுங்களே…
ஸ்ரீரங்கக் காவிரியில் சேலாட்டம் ஆடுங்களே…

குழு : ஸ்ரீரங்கக் காவிரியில் சேலாட்டம் ஆடுங்களே…

பெண் : வேங்கடத்து மலைதனிலே வெண்முகிலாய் மாறுங்களே…
ஸ்ரீரங்கக் காவிரியில் சேலாட்டம் ஆடுங்களே…

பெண் : கோபியரே கோபியரே…
கொஞ்சும் இளம் வஞ்சியரே…
கோவிந்தன் பேரைச் சொல்லி…
கும்மி கொட்டி ஆடுங்களே…

குழு : கோவிந்தன் பேரைச் சொல்லி…
கும்மி கொட்டி ஆடுங்களே…

BGM

பெண் : நந்தகுமார் மெல்லிசையில் நடனமிடும் தோகைகளே…
பந்தமுள்ள திருமழிசைப் பறவைகளாய் மாறுங்களே…

குழு : பந்தமுள்ள திருமழிசைப் பறவைகளாய் மாறுங்களே…

பெண் : நந்தகுமார் மெல்லிசையில் நடனமிடும் தோகைகளே…
பந்தமுள்ள திருமழிசைப் பறவைகளாய் மாறுங்களே…
சிந்துமணி வைரநகை ஸ்ரீராமன் பிம்பம் அவன்…
மந்தி்ரம் சேர் திருமாலின் மறுவடிவத் தோற்றம் அவன்…

குழு : மந்தி்ரம் சேர் திருமாலின் மறுவடிவத் தோற்றம் அவன்…

பெண் : சிந்துமணி வைரநகை ஸ்ரீராமன் பிம்பம் அவன்…
மந்தி்ரம் சேர் திருமாலின் மறுவடிவத் தோற்றம் அவன்…

பெண் : கோபியரே கோபியரே…
கொஞ்சும் இளம் வஞ்சியரே…
கோவிந்தன் பேரைச் சொல்லி…
கும்மி கொட்டி ஆடுங்களே…

குழு : கோவிந்தன் பேரைச் சொல்லி…
கும்மி கொட்டி ஆடுங்களே…

BGM

பெண் : ஆழிமழைக் கண்ணன் அவன்…
அழகுநகை மன்னன் அவன்…
தாழை இலை பயிரினைப் போல்…
தானுறையும் வண்ணன் அவன்…

குழு : தாழை இலை பயிரினைப் போல்…
தானுறையும் வண்ணன் அவன்…

பெண் : ஆழிமழைக் கண்ணன் அவன்…
அழகுநகை மன்னன் அவன்…
தாழை இலை பயிரினைப் போல்…
தானுறையும் வண்ணன் அவன்…

பெண் : நாடிவரும் அன்னையர்க்கு…
நவநீத கிருஷ்ணன் அவன்…
நந்தகுல யாதவர்க்கு…
ராகவ பாலன் அவன்…

குழு : நந்தகுல யாதவர்க்கு…
ராகவ பாலன் அவன்…

பெண் : நாடிவரும் அன்னையர்க்கு…
நவநீத கிருஷ்ணன் அவன்…
நந்தகுல யாதவர்க்கு…
ராகவ பாலன் அவன்…

பெண் : கோபியரே கோபியரே…
கொஞ்சும் இளம் வஞ்சியரே…
கோவிந்தன் பேரைச் சொல்லி…
கும்மி கொட்டி ஆடுங்களே…

குழு : கோவிந்தன் பேரைச் சொல்லி…
கும்மி கொட்டி ஆடுங்களே…

BGM


Notes : Gopiyare Gopiyare Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Kannadasan. கோபியரே கோபியரே பாடல் வரிகள்.


Scroll to Top