புடிச்சிருக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிஹரன், கோமல் ரமேஷ் & மஹதிஹாரிஸ் ஜெயராஜ்சாமி

Pudichirukku Song Lyrics in Tamil


BGM

பெண் : அய்யய்யோ அய்யய்யோ புடிச்சிருக்கு…
உனக்கு என்னை புடிச்சிருக்கு…
என்னவோ என்னவோ புடிச்சிருக்கு…
எனக்கும் உன்னை புடிச்சிருக்கு…

ஆண் : துணிச்சல் புடிச்சிருக்கு…
உன் துடிப்பும் ரொம்ப புடிச்சிருக்கு…
வெகுளித்தனம்தான் புடிச்சிருக்கு…
என்னை திருடும் பாா்வை புடிச்சிருக்கு…

பெண் : புதிதாய் திருடும் திருடி எனக்கு…
முழுதாய் திருடத்தான் தொியல…

பெண் : அய்யய்யோ அய்யய்யோ புடிச்சிருக்கு…
உனக்கு என்னை புடிச்சிருக்கு…
என்னவோ என்னவோ புடிச்சிருக்கு…
எனக்கும் உன்னை புடிச்சிருக்கு…

BGM

ஆண் : வள்ளுவாின் குறளாய்…
ரெண்டு வாி இருக்கும்…
உதட்டை புடிச்சிருக்கு…

பெண் : காதல் மடல் அருகே…
உதடுகள் நடத்தும்…
நாடகம் புடிச்சிருக்கு…

ஆண் : உன் மடிசாா் மடிப்புகள் புடிச்சிருக்கு…
அதில் குடித்தனம் நடத்திட புடிச்சிருக்கு…

பெண் : தினம் நீ கனவில் வருவதனால்…
ஐயோ தூக்கத்தை புடிச்சிருக்கு…

பெண் : அய்யய்யோ அய்யய்யோ புடிச்சிருக்கு…
ஆண் : உனக்கு என்னை புடிச்சிருக்கு…

பெண் : என்னவோ என்னவோ புடிச்சிருக்கு…
ஆண் : எனக்கும் உன்னை புடிச்சிருக்கு…

BGM

ஆண் : காதல் வந்து நுழைந்தால்…
போதி மர கிளையில்…
ஊஞ்சல் கட்டி புத்தன் ஆடுவான்…

பெண் : காதலிலே விழுந்தால்…
கட்டபொம்மன் கூட…
போா்களத்தில் பூக்கள் பறிப்பான்…

ஆண் : காலையும் மாலையும் படிக்கும் உன்னை…
இன்று காதல் பாடங்கள் படிக்க வைத்தேன்…

பெண் : காவல்காரனாய் இருந்த உன்னை…
இன்று கள்வனாய் மாற்றி விட்டேன்…

ஆண் : அடடா அடடா… அடடா அடடா புடிச்சிருக்கு…
உனக்கு என்னை புடிச்சிருக்கு…
என்னவோ என்னவோ புடிச்சிருக்கு…
எனக்கும் உன்னைதான் புடிச்சிருக்கு…

ஆண் : துணிச்சல் புடிச்சிருக்கு…
உன் துடிப்பும் ரொம்ப புடிச்சிருக்கு…
வெகுளித்தனம்தான் புடிச்சிருக்கு…
என்னை திருடும் பாா்வை புடிச்சிருக்கு…

பெண் : புதிதாய் திருடும் திருடி எனக்கு…
முழுதாய் புடிச்சிருக்கு…

BGM


Notes : Pudichirukku Song Lyrics in Tamil. This Song from Saamy (2003). Song Lyrics penned by Na. Muthukumar. புடிச்சிருக்கு பாடல் வரிகள்.


Scroll to Top