பிரியசகி பிரியசகி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமனோ & எஸ். ஜானகிஇளையராஜாகோபுர வாசலிலே

Priyasakhi Priyasakhi Song Lyrics in Tamil


ஆண் : பிரியசகி… பிரியசகி…
வருவேன் வாசல் தேடி…
வருத்தம் ஏனடி…
தருவேன் பாடல் கோடி…
தனிமை ஏதடி…
இளைய தேகம்… ஓஓஓ…
இணைய வேண்டும்…

BGM

பெண் : பிரியசகி நான் பிரியசகி…
பிரியசகி உன் பிரியசகி…

பெண் : வருவாய் வாசல் தேடி…
வருந்தும் பூங்கொடி…
தருவாய் பாடல் கோடி…
தவிக்கும் பைங்கிளி…

பெண் : இளைய தேகம்… ஓஓஓ…
இணைய வேண்டும்…
இனிய ராகம்… ஓஓஓ…
புனைய வேண்டும்…

ஆண் : பிரியசகி ஓ பிரியசகி…

BGM

பெண் : காதலன் வீரமிகு ஆண்மகன் ஆண்மகன்…
காவலை மீறிவரும் நாயகன் நாயகன்…
காதலன் வீரமிகு ஆண்மகன் ஆண்மகன்…
காவலை மீறிவரும் நாயகன் நாயகன்…

ஆண் : பார்வை ஒன்று காட்டு கண்மணி…
பூமி தன்னைக் கையில் ஏந்துவேன்…
வார்த்தை ஒன்று பேசு பொன்மணி…
மேகம் போல வானில் நீந்துவேன்…

பெண் : வானமும் வையமும் வாழ்த்துமே வா…

ஆண் : பிரியசகி ஓ பிரியசகி…
பிரியசகி ஓ பிரியசகி…

BGM

பெண் : கூண்டிலே காதல் குயில் வாடுது வாடுது…
அன்று போல் கூவி உனைத் தேடுது தேடுது…
கூண்டிலே காதல் குயில் வாடுது வாடுது…
அன்று போல் கூவி உனைத் தேடுது தேடுது…

ஆண் : வெண்ணிலாவைச் சிறையில் வைப்பதா…
மானம் என்ன வெளியில் நிற்பதா…
வீரமான நெஞ்சமில்லையா…
நெஞ்சில் இந்த வஞ்சியில்லையா…

பெண் : நீ வரும் பாதையைப் பார்க்கிறேன் வா…

பெண் : பிரியசகி நான் பிரியசகி…
ஆண் : பிரியசகி ஓ பிரியசகி…


Notes : Priyasakhi Priyasakhi Song Lyrics in Tamil. This Song from Gopura Vasalile (1991). Song Lyrics penned by Vaali. பிரியசகி பிரியசகி பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top