தாலாட்டும் பூங்காற்று

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். ஜானகிஇளையராஜாகோபுர வாசலிலே

Thalattum Poongatru Song Lyrics in Tamil


—BGM—

பெண் : தாலாட்டும் பூங்காற்று நானல்லவா…
நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா…

பெண் : வருவாயோ வாராயோ…
ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே…
என் நெஞ்சமே உன் தஞ்சமே…

பெண் : தாலாட்டும் பூங்காற்று நானல்லவா…
நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா…

—BGM—

பெண் : நள்ளிரவில் நான் கண் விழிக்க…
உன் நினைவில் என் மெய் சிலிர்க்க…
பஞ்சணையில் நீ முள் விரித்தாய்…
பெண் மனதை நீ ஏன் பறித்தாய்…

பெண் : ஏக்கம் தீயாக ஏதோ நோயாக…
காணும் கோலங்கள் யாவும் நீயாக…
வாசலில் மன்னா உன் தேர் வர…
ஆடுது பூந்தோரணம்…

பெண் : தாலாட்டும் பூங்காற்று நானல்லவா…
நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா…

—BGM—

ஆண் : எப்பொழுதும் உன் சொப்பனங்கள்…
முப்பொழுதும் உன் கற்பனைகள்…
சிந்தனையில் நம் சங்கமங்கள்…
ஒன்றிரண்டா என் சஞ்சலங்கள்…

ஆண் : காலை நான் பாடும் காதல் பூபாளம்…
காதில் கேட்காதோ கண்ணா எந்நாளும்…
ஆசையில் நாள்தோறும் நான் தொழும்…
ஆலயம் நீயல்லவா…

பெண் : தாலாட்டும் பூங்காற்று நானல்லவா…
நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா…

பெண் : வருவாயோ வாராயோ…
ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே…
என் நெஞ்சமே உன் தஞ்சமே…

பெண் : தாலாட்டும் பூங்காற்று நானல்லவா…
நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா…


Notes : Thalattum Poongatru Song Lyrics in Tamil. This Song from Gopura Vasalile (1991). Song Lyrics penned by Vaali. தாலாட்டும் பூங்காற்று பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading