காதல் கவிதைகள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராஇளையராஜாகோபுர வாசலிலே

Kadhal Kavidhaigal Song Lyrics in Tamil


பெண் : எஸ் ஐ லவ் திஸ் இடியட்…
ஐ லவ் திஸ் லவ்வபில் இடியட்…

BGM

ஆண் : காதல் கவிதைகள் படித்திடும்…
நேரம் இதழோரம்…
இனி காமன் கலைகளில் பிறந்திடும்…
ராகம் புது மோகம்…

ஆண் : இதயம் இடம் மாறும்…
இளமை பரிமாறும்…
அமுதும் வழிந்தோடும்…
அழகில் கலந்தாட…

ஆண் & பெண் : இதம் தரும் காதல்…

பெண் : கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்…
இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம்…

பெண் : இதயம் இடம் மாறும்…
இளமை பரிமாறும்…
அமுதும் வழிந்தோடும்…
அழகில் கலந்தாட…

ஆண் & பெண் : இதம் தரும் காதல்…
ஆண் : கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்…

BGM

ஆண் : கை வீசிடும் தென்றல்…
கண் மூடிடும் மின்னல்…
இது கனியோ கவியோ அமுதோ சிலையழகோ…

பெண் : பண்பாடிடும் சந்தம்…
உன் நாவினில் சிந்தும்…
அது மழையோ புனலோ நதியோ கலையழகோ…

ஆண் : மேகம் ஒன்று நேரில் இங்கு…
வாழ்த்த வந்ததடி…
தாகம் கொண்ட பூமி நெஞ்சில்…
சேர்த்துக்கொண்டதடி…

பெண் : இது தொடரும் வளரும் மலரும்…
இனி கனவும் நினைவும் உனையே…

ஆண் : தொடர்ந்திடும் காதல் கவிதைகள்…
படித்திடும் நேரம் இதழோரம்…

பெண் : இனி காமன் கலைகளில் பிறந்திடும்…
ராகம் புது மோகம்…

ஆண் : இதயம் இடம் மாறும்…
இளமை பரிமாறும்…

பெண் : அமுதும் வழிந்தோடும்…
அழகில் கலந்தாட…

ஆண் : இதம் தரும் காதல் கவிதைகள் படித்திடும் நேரம்…
பெண் : இதழோரம்…

பெண் : இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம்…
ஆண் : புது மோகம்…

BGM

பெண் : பூமாலைகள் கொஞ்சும்…
பாமாலைகள் கெஞ்சும்…
உனை மனதால் நினைத்தால் அணைத்தால்…
அது இனிமை…

ஆண் : தோள் சேர்ந்திடும் கங்கை…
செவ்வாழையின் தங்கை…
எனை ஒரு நாள் பல நாள் தொடர்ந்தாள்…
அது புதுமை…

பெண் : கோவிலுக்குள் ஏற்றி வைத்த தீபம் அல்லவோ…
காதலுக்கு காத்திருந்து காட்சி தந்ததோ…

ஆண் : இனி வருவாய் தருவாய் மலர்வாய்…
எனை உயிராய் உறவாய் தொடர்வாய்…

பெண் : இதம் தரும் காதல் கவிதைகள் படித்திடும்…
நேரம் இதழோரம்…

ஆண் : இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம்…
புது மோகம்…

பெண் : இதயம் இடம் மாறும்…
இளமை பரிமாறும்…

ஆண் : அமுதும் வழிந்தோடும்…
அழகில் கலந்தாட…

பெண் : இதம் தரும் காதல் கவிதைகள் படித்திடும் நேரம்…
ஆண் : இதழோரம்…

ஆண் : இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம்…
பெண் : புது மோகம்…


Notes : Kadhal Kavidhaigal Song Lyrics in Tamil. This Song from Gopura Vasalile (1991). Song Lyrics penned by Vaali. காதல் கவிதைகள் பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top