துள்ளி துள்ளி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகிஇளையராஜாசிப்பிக்குள் முத்து

Thulli Thulli Song Lyrics in Tamil


—BGM—

பெண் : நிசரிம பநிசரி நிரி ரி சநி பம…
பநிச நி பம ரிமரீ நீ சா…
தா நனனா தா ன நா ததரீ நா…
ஆ ஆஆஅ ஆஅ…

ஆண் : துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா…
பெண் : அஹான் ஹா…
ஆண் : நீ கண்ணீர் விட்டால்…
பெண் : ஹ்ம்ம்ம்…
ஆண் : சின்ன மனம் தாங்காதம்மா…
பெண் : ஹஹஹஹா…

ஆண் : துள்ளி துள்ளி நீ பாடம்மா…
பெண் : ம்ம்ம்… ஆஅ ஆஅ…
ஆண் : சீதையம்மா…

ஆண் : நீ…
பெண் : கண்ணீர் விட்டால் சின்ன மனம் தாங்காதம்மா…
ஆண் : ஆஅ…
பெண் : ஆஆ… ஆஆஆஆ… ஆஅ…

பெண் : துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா…

ஆண் : துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி
பெண் : துள்ளி துள்ளி துள்ளி…

ஆண் : துள்ளி துள்ளி…
பெண் : ஹ்ம்ம்…
ஆண் & பெண் : நீ பாடம்மா சீதையம்மா…

—BGM—

ஆண் : கட்டிய தாலி உண்மை என்று…
நீ அன்று ராமனை நம்பி வந்தாய்…

பெண் : கட்டிய தாலி உண்மை என்று…
நீ அன்று ராமனை நம்பி வந்தாய்…

ஆண் : மன்னவன் உன்னை மறந்ததென்ன…
உன் கண்ணீரில் கானகம் நனைந்ததென்ன…

பெண் : மன்னவன் உன்னை மறந்ததென்ன…

ஆண் : மன்னவன் உன்னை மறந்ததென்ன…
உன் கண்ணீரில் கானகம் நனைந்ததென்ன…

ஆண் : தாயே தீயில் மூழ்கி…
அட தண்ணீரில் தாமரை போல நீ வந்தாய்…
நீதி மட்டும் உறங்காது…
நெஞ்சே நெஞ்சே நீ தூங்கு…

பெண் : நீதி மட்டும் உறங்காது…
நெஞ்சே நெஞ்சே நீ தாங்கு…

பெண் : துள்ளி துள்ளி துள்ளி… துள்ளி துள்ளி துள்ளி…
ஆண் : துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா…

—BGM—

ஆண் : துன்பம் என்றும் ஆணுக்கல்ல…
அது அன்றும் இன்றும் பெண்களுக்கே…
துன்பம் என்றும் ஆணுக்கல்ல…
அது அன்றும் இன்றும் பெண்களுக்கே…

ஆண் : நீ அன்று சிந்திய கண்ணீரில்…
இந்த பூமியும் வானமும் நனைந்ததம்மா…
நீ அன்று சிந்திய கண்ணீரில்…
இந்த பூமியும் வானமும் நனைந்ததம்மா…

ஆண் : இரவென்றால் மறுநாளே விடியும்…
உன் தோட்டத்தில் அப்போது பூக்கள் மலரும்…

ஆண் : அன்பு கொண்டு நீ ஆடு…
காலம் கூடும் பூப்போடு…

பெண் : அன்பில்லை நான் ஆட… ஹ…
தோள் இல்லை நான் பூப்போட…

ஆண் : துள்ளி துள்ளி துள்ளி…


Notes : Thulli Thulli Song Lyrics in Tamil. This Song from Sippikkul Muthu (1986). Song Lyrics penned by Vairamuthu. துள்ளி துள்ளி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading