இளமையெனும் பூங்காற்று

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாபகலில் ஒரு இரவு

Ilamai Ennum Poonkaatru Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : இளமையெனும் பூங்காற்று…
பாடியது ஓர் பாட்டு…
ஒரு பொழுது ஓர் ஆசை…
சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்…

ஆண் : இளமையெனும் பூங்காற்று…
பாடியது ஓர் பாட்டு…
ஒரு பொழுது ஓர் ஆசை…
சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்…

ஆண் : ஒரே வீணை ஒரே ராகம்…

—BGM—

ஆண் : தன்னை மறந்து…
மண்ணில் விழுந்து…
இளமை மலரின் மீது…
தன்னை இழந்த வண்டு…

ஆண் : தேக சுகத்தில் கவனம்…
காட்டு வழியில் பயணம்…
கங்கை நதிக்கு மண்ணில் அணையா…

ஆண் : இளமையெனும் பூங்காற்று…

—BGM—

ஆண் : அங்கம் முழுதும்…
பொங்கும் இளமை…
இதம் பதமாய் தோன்ற…
அள்ளி அணைத்த கைகள்…

ஆண் : கேட்க நினைத்தாள் மறந்தாள்…
கேள்வி எழும் முன் விழுந்தாள்…
எந்த உடலோ… எந்த உறவோ…

ஆண் : இளமையெனும் பூங்காற்று…

—BGM—

ஆண் : மங்கை இனமும்…
மன்னன் இனமும்…
குலம் குணமும் என்ன…
தேகம் துடித்தால் கண்ணேது…

ஆண் : கூந்தல் கலைந்த கனியே…
கொஞ்சி சுவைத்த கிளியே…
இந்த நிலைதான் என்ன விதியோ…

ஆண் : இளமையெனும் பூங்காற்று…
பாடியது ஓர் பாட்டு…
ஒரு பொழுது ஓர் ஆசை…
சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்…

ஆண் : ஒரே வீணை ஒரே ராகம்…
ஒரே வீணை ஒரே ராகம்…


Notes : Ilamai Ennum Poonkaatru Song Lyrics in Tamil. This Song from Pagalil Oru Iravu (1979). Song Lyrics penned by Kannadasan. இளமையெனும் பூங்காற்று பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading