போறாளே பொன்னுத்தாயி (சோகம்)

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசுவர்ணலதாஏ.ஆர்.ரகுமான்கருத்தம்மா

Poraley Ponnuthai (Sad) Song Lyrics in Tamil


பெண் : ஓஓஓஓ… ஓஓ… ஓஓஓஓ…
ஓஓ… ஓஓ… ஓஓ… ஓஓ… ஓஓ… ஓஓ…

பெண் : போறாளே பொன்னுத்தாயி…
பொல பொலவென்று கண்ணீர் விட்டு…
தண்ணீரும் சோரும் தந்த மண்ணை விட்டு…

பெண் : பால் பீச்சும் மாட்ட விட்டு…
பஞ்சாரத்துக் கோழியை விட்டு…
போறாளே பொட்டப்புள்ள ஊரை விட்டு…

பெண் : சாமந்திப் பூவா…
ஊமத்தம் பூவா…
கருத்தம்மா எந்தப் பூவம்மா…

பெண் : அஞ்சாறு சீம…
உள்ளூரில் ஏங்க…
பொதி மாட்டு வண்டி மேலே…
போட்டு வச்ச மூட்டை போல…

பெண் : போறாளே பொன்னுத்தாயி…
பொல பொலவென்று கண்ணீர் விட்டு…
தண்ணீரும் சோரும் தந்த மண்ணை விட்டு…

பெண் : பால் பீச்சும் மாட்ட விட்டு…
பஞ்சாரத்துக் கோழியை விட்டு…
போறாளே பொட்டப்புள்ள ஊரை விட்டு…

—BGM—

பெண் : நீ வச்ச பாசம்…
நீ சொன்ன நேசம்…
கடைசியில் ஊமையும் ஊமையும்…
பேசிய பாஷையடி…

பெண் : தெக்கத்தி காத்து…
திசை மாறி வீச…
ஒன்னொன்னா மேகம்…
ஓடுதடி ஓடுதடி…

பெண் : உசுருள்ள நாத்து ஒன்னு…
வாடுதடி வாடுதடி…
கடைசியில் சாமிக்கு நேர்ந்தது…
சாதிக்கு ஆனதடி…

பெண் : போறாளே பொன்னுத்தாயி…
பொல பொலவென்று கண்ணீர் விட்டு…
தண்ணீரும் சோரும் தந்த மண்ணை விட்டு…

பெண் : பால் பீச்சும் மாட்ட விட்டு…
பஞ்சாரத்துக் கோழியை விட்டு…
போறாளே பொட்டப்புள்ள ஊரை விட்டு…

பெண் : ஓஓஓஓ… ஓஓ… ஓஓஓஓ…
ஓஓ… ஓஓ… ஓஓ… ஓஓ…

பெண் : நெஞ்சுக்குழி காஞ்சு…
நெடுங்காலம் ஆச்சு…
ஒரு உயிர் வீட்டுக்கும் காட்டுக்கும்…
கூட்டுக்குள் இழுக்குதும்மா…

பெண் : சேமிச்ச காசு…
செல்லாமப் போச்சு…
சொல்லாத சொல்லு…
பாரம் அம்மா பாரம் அம்மா…
சோத்துக்கும் சொந்தத்துக்கும்…
தூரமம்மா தூரமம்மா…

பெண் : பொறு பொறு ஏழைக்கும் வாழைக்கும்…
நாளைக்கு நன்மையம்மா…

பெண் : போறாளே பொன்னுத்தாயி…
பொல பொலவென்று கண்ணீர் விட்டு…
தண்ணீரும் சோரும் தந்த மண்ணை விட்டு…

பெண் : பால் பீச்சும் மாட்ட விட்டு…
பஞ்சாரத்துக் கோழியை விட்டு…
போறாளே பொட்டப்புள்ள ஊரை விட்டு…

பெண் : சாமந்திப் பூவா…
ஊமத்தம் பூவா…
கருத்தம்மா எந்தப் பூவம்மா…

பெண் : அஞ்சாறு சீம…
உள்ளூரில் ஏங்க…
பொதி மாட்டு வண்டி மேலே…
போட்டு வச்ச மூட்டை போல…

பெண் : போறாளே பொன்னுத்தாயி…
பொல பொலவென்று கண்ணீர் விட்டு…
தண்ணீரும் சோரும் தந்த மண்ணை விட்டு…

பெண் : பால் பீச்சும் மாட்ட விட்டு…
பஞ்சாரத்துக் கோழியை விட்டு…
போறாளே பொட்டப்புள்ள ஊரை விட்டு…

—BGM—


Notes : Poraley Ponnuthai (Sad) Song Lyrics in Tamil. This Song from Karuthamma (1994). Song Lyrics penned by Vairamuthu. போறாளே பொன்னுத்தாயி (சோகம்) பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading