ஒரு கிளி ஒரு கிளி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிசதீஷ் சக்ரவர்த்தி & ஸ்ரேயா கோஷல்சதீஷ் சக்ரவர்த்திலீலை

Oru Kili Oru Kili Song Lyrics in Tamil


—BGM—

பெண் : ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி…
உன்னை தொடவே அனுமதி…
ஒரு துளி ஒரு துளி சிறு துளி…
வழிகிறதே விழி வழி…

ஆண் : உனக்குள் நான் வாழும்…
விவரம் நான் கண்டு…
வியக்கிறேன் வியர்க்கிறேன்…

பெண் : எனக்கு நான் அல்ல…
உனக்குதான் என்று உணர்கிறேன்…

ஆண் : நிழல் என தொடர்கிறேன்…

ஆண் : ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி…
உன்னை தொடவே அனுமதி…
ஒரு துளி ஒரு துளி சிறு துளி…
வழிகிறதே விழி வழி…

—BGM—

பெண் : விழி அல்ல விரல் இது…
ஓர் மடல்தான் வரைந்தது…
உயிர் அல்ல உயில் இது…
உனக்குதான் உரியது…

ஆண் : இமைகளின் இடையில் நீ…
இமைப்பதை நான் தவிர்க்கிறேன்…
விழிகளின் வழியில் நீ…
உறக்கம் வந்தால் தடுக்கிறேன்…

பெண் : காதல்தான் எந்நாளும் ஒரு…
வார்த்தைக்குள் வராதது…

ஆண் : காலங்கள் சென்றாலும் அந்த…
வானம் போல் விழாதது…

ஆண் : ஒரு கிளி ஒரு கிளி…

பெண் : சிறு கிளி…
உன்னை தொடவே அனுமதி…
ஒரு துளி ஒரு துளி சிறு துளி…
வழிகிறதே விழி வழி…

—BGM—

ஆண் : தூரத்து மேகத்தை…
துரத்தி செல்லும் பறவை போலே…
தோகையே உன்னை நான்…
தேடியே வந்தேன் இங்கே…

பெண் : பொய்கையை போல் கிடந்தவள்…
பார்வை என்னும் கல் எறிந்தாய்…
தங்கினேன் உன் கையில்…
வழங்கினேன் இன்றே…

ஆண் : தோழியே உன் தேகம் இளம்…
தென்றல்தான் தொடாததோ…

பெண் : தோழனே உன் கைகள் தொட…
நாணம்தான் விடாததோ…

பெண் : ஒரு கிளி ஒரு கிளி…

ஆண் : சிறு கிளி…
உன்னை தொடவே அனுமதி…
ஒரு துளி ஒரு துளி சிறு துளி…
வழிகிறதே விழி வழி…

பெண் : உனக்குள் நான் வாழும்…
விவரம் நான் கண்டு…
வியக்கிறேன் வியர்க்கிறேன்…

ஆண் : எனக்கு நான் அல்ல…
உனக்குதான் என்று உணர்கிறேன்…

பெண் : நிழல் என தொடர்கிறேன்…

ஆண் & பெண் : ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி…
உன்னை தொடவே அனுமதி…
ஒரு துளி ஒரு துளி சிறு துளி…
வழிகிறதே விழி வழி…

—BGM—


Notes : Oru Kili Oru Kili Song Lyrics in Tamil. This Song from Leelai (2012). Song Lyrics penned by Vaali. ஒரு கிளி ஒரு கிளி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading