பூங்கொடிதான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாஇதயம்

Poongodithan Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பூங்கொடிதான் பூத்ததம்மா…
பொன்வண்டுதான் பார்த்ததம்மா…
பாட்டெடுக்க தாமதிக்க…
வாடைக் காற்று பூப்பறித்து போனதம்மா…

ஆண் : பூங்கொடிதான் பூத்ததம்மா…
பொன்வண்டுதான் பார்த்ததம்மா…

—BGM—

ஆண் : ஆசைக்குத் தாழ் போட்டு அடைத்தென்ன லாபம்…
அதுதானே குடம் தன்னில் எரிகின்ற தீபம்…
மனதோடு திரை போட்டு மறைக்கின்ற மோகம்…
மழைநீரைப் பொழியாமல் இருக்கின்ற மேகம்…

ஆண் : சிலருக்குச் சில நேரம் துணிச்சல்கள் பிறக்காது…
துணிச்சல்கள் பிறக்காமல் கதவுகள் திறக்காது…
காட்டாத காதலெல்லாம் மீட்டாத வீணையைப் போல்…
ஓஹோ ஓஓ… ஓஹோ ஓஓ…

ஆண் : பூங்கொடிதான் பூத்ததம்மா…
பொன்வண்டுதான் பார்த்ததம்மா…
பாட்டெடுக்க தாமதிக்க…
வாடைக் காற்று பூப்பறித்து போனதம்மா…

ஆண் : பூங்கொடிதான் பூத்ததம்மா…
பொன்வண்டுதான் பார்த்ததம்மா…

—BGM—

ஆண் : தாய்கூட அழுகின்ற பி்ள்ளைக்குத்தானே…
பசியென்று பரிவோடு பாலூட்ட வருவாள்…
உன்வீட்டுக் கண்ணாடி ஆனாலும் கூட…
முன் வந்து நின்றால்தான் முகம் காட்டும் இங்கே…

ஆண் : மனதுக்குள் பலகோடி நினைவுகள் இருந்தாலும்…
உதடுகள் திறந்தால்தான் உதவிகள் பெறக்கூடும்…
கோழைக்குக் காதலென்ன ஊமைக்குப் பாடலென்ன…
ஓஹோ ஓஓ… ஓஹோ ஓஓ…

ஆண் : பூங்கொடிதான் பூத்ததம்மா…
பொன்வண்டுதான் பார்த்ததம்மா…
பாட்டெடுக்க தாமதிக்க…
வாடைக் காற்று பூப்பறித்து போனதம்மா…

ஆண் : பூங்கொடிதான் பூத்ததம்மா…
பொன்வண்டுதான் பார்த்ததம்மா…
பூங்கொடிதான் பூத்ததம்மா…
பொன்வண்டுதான் பார்த்ததம்மா…


Notes : Poongodithan Song Lyrics in Tamil. This Song from Idhayam (1991). Song Lyrics penned by Vaali. பூங்கொடிதான் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading