பூவாசம் புறப்படும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துவிஜய் பிரகாஷ் & சாதனா சர்கம்வித்யாசாகர்அன்பே சிவம்

Poo Vaasam Song Lyrics in Tamil


—BGM—

பெண் : ஆ… ஆ…

—BGM—

பெண் : ஆ…

—BGM—

ஆண் : பூவாசம்…
புறப்படும் பெண்ணே…
நான் பூ வரைந்தால்…
தீ வந்து…
விரல் சுடும் கண்ணே…
நான் தீ வரைந்தால்…

பெண் : உயிரல்லதெல்லாம்…
உயிர் கொள்ளும் என்றால்…
உயிருள்ள நானோ…
என்னாகுவேன்…

ஆண் : உயிர் வாங்கிடும்…
ஓவியம் நீயடி… இ… இ…

—BGM—

ஆண் : பூவாசம் புறப்படும் பெண்ணே…
நான் பூ வரைந்தால்…
தீ வந்து விரல் சுடும் கண்ணே…
நான் தீ வரைந்தால்…

—BGM—

ஆண் : ம்ம்ம்ம்…
புள்ளி சேர்ந்து
புள்ளி சேர்ந்து… ஓவியம்…
உள்ளம் சேர்ந்து
உள்ளம் சேர்ந்து… காவியம்…

பெண் : கோடு கூட…
ஓவியத்தின் பாகமே…
ஊடல் கூட காதல்…
என்று ஆகுமே…

ஆண் : ஒரு வானம் வரைய…
நீல வண்ணம்…
நம் காதல் வரைய…
என்ன வண்ணம்…

பெண் : என் வெட்கத்தின்…
நிறம் தொட்டு…
விரல் என்னும்…
கோல் கொண்டு…
நம் காதல்…
வரைவோமே…
வா… ஆ… ஆ…

ஆண் : பூவாசம்…
புறப்படும் பெண்ணே…
நான் பூ வரைந்தால்…
தீ… வந்து…
விரல் சுடும் கண்ணே…
நான் தீ வரைந்தால்…

—BGM—

பெண் : ஆ… ஆ…

—BGM—

பெண் : ஆ…

—BGM—

பெண் : ஓவியத்தின்…
ஜீவன் எங்கு உள்ளது…

ஆண் : உற்றுப் பார்க்கும்…
ஆளின் கண்ணில் உள்ளது…

பெண் : பெண்ணுடம்பில்…
காதல் எங்கு உள்ளது…

ஆண் : ஆண் தொடாத…
பாகம் தன்னில் உள்ளது…

பெண் : நீ வரையத் தெரிந்த…
ஒரு நவீன கவிஞன்…
பெண் வசியம் தெரிந்த…
ஒரு நளிந்த கலைஞன்…

ஆண் : மேகத்தை ஏமாற்றி…
மண்சேரும் மழை போலே…
மடியோடு விழுந்தாயே…
வா… ஆ… ஆ…

ஆண் : பூவாசம்…
புறப்படும் பெண்ணே…
நான் பூ வரைந்தால்…

பெண் : ம்ம்ம்… ஹ்ம்ம்… ஹ்ம்ம்…

ஆண் : தீ வந்து…
விரல் சுடும் கண்ணே…
நான் தீ வரைந்தால்…

பெண் : உயிரல்லதெல்லாம்…
உயிர் கொள்ளும் என்றால்…
உயிருள்ள நானோ…
என்னாகுவேன்…

ஆண் : உயிர் வாங்கிடும்…
ஓவியம் நீயடி…

—BGM—

பெண் : ஆ… ஆ…

—BGM—

பெண் : ஆ…

—BGM—


Notes : Poo Vaasam Song Lyrics in Tamil. This Song from Anbe Sivam (2003). Song Lyrics penned by Vairamuthu. பூவாசம் புறப்படும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading