ஏலே மச்சி மச்சி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகமல்ஹாசன் & உதித் நாராயண்வித்யாசாகர்அன்பே சிவம்

Ele Machi Machi Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஏலே மச்சி மச்சி…
தல சுத்தி சுத்தி…
உன் புத்தி கெட்டு போயாச்சு…

ஆண் : என் மூளைக்குள்ள பல பட்டாம் பூச்சி…
எட்டி எட்டி பாக்குது என்னாச்சு…

ஆண் : அட டாலர் போல போத ஏறி போச்சு…
நம்ம ரூபா போல புத்தி இறங்கி போச்சு…
போத ஏறினால்…

ஆண் : கொஞ்சம் ஞானம் பொறக்குது…
போத தெளிஞ்சதும் வந்த ஞானம் பறக்குது…

ஆண் : ஏலே மச்சி மச்சி…
தல சுத்தி சுத்தி…
உன் புத்தி கெட்டு போயாச்சு…

—BGM—

ஆண் : ஏதாச்சு போதை ஒன்னு…
எப்போதும் தேவை கண்ணா…
இல்லாட்டி மனுஷனுக்கு சக்தி இல்ல…

ஆண் : தாய் பாலும் போத தரும்…
சாராயம் போத தரும்…
இரண்டையும் பிரித்தது என் புத்திஇல்ல…

ஆண் : தாய் பாலின் போதை…
சில மாதம் மட்டும்…
சாராய போதை நாம் வாழும் மட்டும்…

ஆண் : போதை மாறலாம் உன் புத்தி மாறுமா…
புத்தர் சொல்லியும் நாய் வாலு நிமிருமா…

ஆண் : ஏலே மச்சி மச்சி…
தல சுத்தி சுத்தி…
உன் புத்தி கெட்டு போயாச்சு…

—BGM—

ஆண் : வாழ்க்கை புதையலப்பா…
வலுத்தவன் எடுத்துகப்பா…
அவன் அவன் வயித்துக்குதான்…
வாழ்வது தப்பா…

ஆண் : அடுத்தவன் வயித்துக்குள்ள…
உன் உணவு இல்லையப்பா…
இளைச்சவன் பசித்திருந்தால்…
இந்த மண்ணு தாங்காதப்பா…

ஆண் : நீ வாதத்துக்கு ரொம்ப கெட்டிகாரன்…
அட வக்கீலுக்கு நீ சொந்தக்காரன்…
சொல்லும் வார்த்தையில்…
என்ன சொக்க வைக்கிற…

ஆண் : இமய மலையில வந்து ஐஸ் விக்கிற…

ஆண் : ஏலே மச்சி மச்சி…
தல சுத்தி சுத்தி…
உன் புத்தி கெட்டு போயாச்சு…

ஆண் : என் மூளைக்குள்ள பல பட்டாம் பூச்சி…
எட்டி எட்டி பாக்குது என்னாச்சு…

—BGM—


Notes : Ele Machi Machi Song Lyrics in Tamil. This Song from Anbe Sivam (2003). Song Lyrics penned by Vairamuthu. ஏலே மச்சி மச்சி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading