லாலி லாலி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
ராஜு முருகன்ஜிப்ரான், சத்யபிரகாஷ் & பிரகதி குருபிரசாத்ஜிப்ரான்தீரன் அதிகாரம் ஒன்று

Laali Laali Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : சின்னச் சின்ன…
கண்ணசைவில்…
உன் அடிமை ஆகவா…
செல்லச் செல்ல முத்தங்களில்…
உன் உயிரை வாங்கவா…

ஆண் : லாலி லாலி…
நானும் தூளி தூளி…

பெண் : மெல்ல மெல்ல…
என்னுயிரில் உன்னுயிரும் அசையுதே…
துள்ளத் துள்ள என்னிதயம்…
நம்முயிருள் நிறையுதே…

பெண் : லாலி லாலி…
நீ என் தூளி தூளி…

ஆண் : உன்னை அள்ளி ஏந்தியே…
ஒரு யுகம் போகவா…
தலை முதல் கால் வரை…
பணிவிடை பார்க்கவா…

ஆண் : லாலி லாலி…
நானும் தூளி தூளி…

பெண் : லாலி லாலி…
நீ என் தூளி தூளி…

—BGM—

பெண் : காலை அணைப்பின்…
வாசமும்…
காதில் கிறங்கும் சுவாசமும்…
சாகும்போதும் தீர்ந்திடாது…
வா உயிரே…

ஆண் : காதில் உதைக்கும் பாதமும்…
மார்பில் கிடக்கும் நேரமும்…
வாழும் வரைக்கும் தேய்ந்திடாது…
வா உயிரே…

ஆண்: ஆணில் தாய்மை கருவாகும்…
ஈரம் பூத்து மழை ஆகும்…

ஆண் & பெண் : கண்ணீர் சுகமாய்…
இமை மீறும்…
காலம் உந்தன் வரமாகும்…

—BGM—

ஆண் : சின்னச் சின்ன…
கண்ணசைவில்…
உன் அடிமை ஆகவா…
செல்லச் செல்ல முத்தங்களில்…
உன் உயிரை வாங்கவா…

ஆண் : லாலி லாலி…
நானும் தூளி தூளி…

பெண் : மெல்ல மெல்ல…
என்னுயிரில் உன்னுயிரும் அசையுதே…
துள்ளத் துள்ள என்னிதயம்…
நம்முயிரில் நிறையுதே…

பெண் : லாலி லாலி…
நீ என் தூளி தூளி…

பெண்: உன்னை அள்ளி ஏந்தியே…
ஒரு யுகம் போகவா…

ஆண் & பெண்: தலை முதல்…
கால் வரை…
பணிவிடை பார்க்கவா…

பெண்: லாலி லாலி…
நீ என் தூளி தூளி…

பெண்: லாலி லாலி…
நீ என் தூளி தூளி…


Notes : Laali Laali Song Lyrics in Tamil. This Song from Theeran Adhigaaram Ondru (2017). Song Lyrics penned by Raju Murugan. லாலி லாலி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading