ஒரு வீட்டில்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஜிப்ரான், ஷாஷா திருப்பதி, இன்னோ கெங்காஜிப்ரான்தீரன் அதிகாரம் ஒன்று

Oru Veettil Song Lyrics in Tamil


—BGM—

பெண் : ஒரு வீட்டில் நீயும் நானும்…
ஒன்றாக வாழும் நேரம்…
எதிர்பார்த்தே இருந்தேன் பல காலம்…
இது நாள் வரையில்…
கனவெல்லாம் இனிதாய் நனவாகும்…
இரவின் மடியில்…

ஆண் : ஒரு வீட்டில் நீயும் நானும்…
ஒன்றாக தூங்கும் நேரம்…
எதிர்பார்த்தே எழுந்தேன் தினந்தோறும்…
முதல் நாள் வரையில்…
இனியெல்லாம் முழுதாய் அரங்கேறும்…
விரும்பும் வகையில்…

—BGM—

பெண் : தினம் தினம் நான் மயங்குகிறேனே…
பகல் எதுவோ இரவெதுவோ…
வெளிச்சங்களை மறுப்பதினாலே…
நிலவுகளின் சதி இதுவோ…

ஆண் : அறையும் கதவும் அடைந்தே கிடந்தாய்…
இரவும் பகலும் இணையும் இருளாய்…

பெண் : உனையே உலகம் என நான்…
நினையும் நிலையே வரமாகும்…

—BGM—

பெண் : ஒரு வீட்டில் நீயும் நானும்…
ஒன்றாக வாழும் நேரம்…
எதிர்பார்த்தே இருந்தேன் பல காலம்…
இது நாள் வரையில்…
கனவெல்லாம் இனிதாய் நனவாகும்…
இரவின் மடியில்…

—BGM—

பெண் : உதடுகளின் அசைவுகள் என்றாய்…
பேச்செனவே அறிந்திருந்தேன்…
ஒலிகளில்லா ஒரு வேலை நீ கொடுத்தாய்…
தெரிந்து கொண்டேன்…

ஆண் : இதுவே குறைவு இனிமேல் இருக்கு…
இனிதாய் தொடரும் முதல் நாள் கிறுக்கு…

பெண் : உடலின் இசைகள் உயிரின் கசைகள்…
மறந்தேன் பல நாட்கள்…

—BGM—

ஆண் : ஒரு வீட்டில் நீயும் நானும்…
ஒன்றாக தூங்கும் நேரம்…
எதிர்பார்த்தே எழுந்தேன் தினந்தோறும்…
முதல் நாள் வரையில்…
இனியெல்லாம் முழுதாய் அரங்கேறும்…
விரும்பும் வகையில்…

—BGM—


Notes : Oru Veettil Song Lyrics in Tamil. This Song from Theeran Adhigaaram Ondru (2017). Song Lyrics penned by Thamarai. ஒரு வீட்டில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading