பூமாலை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாதங்கமகன் (1983)

Poo Maalai Song Lyrics in Tamil


BGM

பெண் : பூமாலை ஒரு பாவையானது…
பொன் மாலை புது பாட்டு பாடுது…
இதை பார்க்க பார்க்க புதுமை…
இசை கேட்க கேட்க இனிமை…
என்னை யார்தான் வெல்வது…
பூமாலை ஒரு பாவையானது…

ஆண் : ஹேய் ஹெய்ஹே ஹெய்ஹே ஹேய்…
ஹேய்ய்ய்ய்… ஹேய்ய்… லால்லலல…
லலல லலல லலல… ஆஅ ஆ ஆஆ ஆஅ…

ஆண் : பூமாலை ஒரு பாவையகுமா…
பொன் மாலை ஒரு பாட்டு பாடுமா…
இதை பார்க்க பார்க்க புதுமை…
இதை கேட்க கேட்க கொடுமை…
அட யார்தான் சொல்வது…
பூமாலை ஒரு பாவையகுமா…

BGM

பெண் : பாடும்போது பூங்காற்று…
பாயும்போது நீரூற்று…
என்னைப் போல பெண்ணில்லை…
பெண்ணை வென்ற ஆணில்லை…

ஆண் : முட்டை போடும் பெட்டைக் கோழியே…
சேவல் கூட போராட்டமா…
கொண்டைச் சேவல் கொத்தும் வேளையில்…
பெட்டைக் கோழி தாங்காதம்மா…

பெண் : தப்பான தாளங்கள் போடாதே…
ஆண் : தகஜிகு தகஜிகு தகு…
தகத் தாகதகத் தாக தக…

பெண் : தப்பான தாளங்கள் போடாதே…
உப்புக் கல் வைரக்கல் ஆகாதே…
நானொரு நாட்டிய தேவதை பாரு…

பெண் : பூமாலை ஒரு பாவையானது…
பொன் மாலை புது பாடல் பாடுது…

BGM

ஆண் : சாமி கூட ஆடத்தான்…
சக்தி போட்டி போடத்தான்…
அம்பாள் பாடு என்ன ஆச்சு…
அம்பலதில் நின்னே போச்சு…

பெண் : காலை தூக்கி நீயும் ஆடலாம்…
ஆண் : ஆஹா…
பெண் : கடவுள் என்று பேராகுமா…
ஆண் : ஓஹோ…

பெண் : காக்கை கூட பாட்டு பாடலாம்…
ஆண் : ஒய்…
பெண் : குயிலின் கீதம் போலாகுமா…

ஆண் : என்னோடு நீ வந்து மோதாதே…
தகஜிகு தகஜிகு தகு…
தகத் தாகு தகு தகு தகு…

ஆண் : என்னோடு நீ வந்து மோதாதே…
உன் பப்பு இங்கேதான் வேகாதே…
ஆடலில் பாடலில் வல்லவன் பாரு…

ஆண் : பூமாலை ஒரு பாவையகுமா… ஹான்…
பொன் மாலை ஒரு பாட்டு பாடுமா…

பெண் : இதை பார்க்க பார்க்க புதுமை…
இதை கேட்க கேட்க கொடுமை…
இதை யார்தான் சொல்வது…
பூமாலை ஒரு பாவையானது…

BGM


Notes : Poo Maalai Song Lyrics in Tamil. This Song from Thangamagan (1983). Song Lyrics penned by Vaali. பூமாலை பாடல் வரிகள்.


Scroll to Top