மொச்ச கொட்ட பல்லழகி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
Unknownடி.சுந்தர் & கே.எஸ். சித்ராசிற்பிஉளவாளி

Mocha Kotta Pallazhagi Song Lyrics in Tamil


ஆண் : மொச்ச கொட்ட பல்லழகி…
முத்து முத்து சொல்லழகி…
சீமையிலே பேரழகி…
செஞ்சி வச்ச மாரழகி…
அப்படி போடு…

ஆண் : மொச்ச கொட்ட பல்லழகி…
முத்து முத்து சொல்லழகி…

—BGM—

ஆண் : மொச்ச கொட்ட பல்லழகி…
முத்து முத்து சொல்லழகி…
சீமையிலே பேரழகி…
செஞ்சி வச்ச மாரழகி…

ஆண் : கொழுந்து வெத்தல தரட்டா…
ஒன் குடுமி மட்டும் தொடட்டா…
கொழுந்து வெத்தல தரட்டா…
ஒன் குடுமி மட்டும் தொடட்டா…

பெண் : தூண்டி முள்ளு கண்ணழகா…
தூரத்திலே பேரழகா…
தூண்டி முள்ளு கண்ணழகா…
தூரத்திலே பேரழகா…
ஆண்டிப்பட்டி ஆணழகா…
மூக்கு மட்டும் கொட மொளகா…

பெண் : கொழுந்து வெத்தல தருவ…
நீ கொல்ல பக்கம் வருவ…
அட கொழுந்து வெத்தல தருவ…
நீ கொல்ல பக்கம் வருவ…

ஆண் : ஏரி அழிஞ்சதுன்னு வெறகடிக்க நீயும் வாடி…
ஏரி அழிஞ்சதுன்னு வெறகடிக்க நீயும் வாடி…

ஆண் : காள மாடு காணாம்னு…
காட்டு வழி நானும் வாரேன்…
ஏரிக்கரை தோப்பு…
அங்கே இடமிருக்கு பாப்பு…
ஏரிக்கரை தோப்பு…
அங்கே இடமிருக்கு பாப்பு…

பெண் : ஏரிக்கரை பக்கம் வந்தா…
எக்குதப்பா நீ நடப்ப…
ஏரிக்கரை பக்கம் வந்தா…
எக்குதப்பா நீ நடப்ப…
கெண்டை சிரிக்கி மக…
கெழுத்தி மீன நீ புடிப்ப…

பெண் : எட்டி தான நில்லு…
எகிறி போகும் பல்லு…
எட்டி தான நில்லு…
எகிறி போகும் பல்லு…

குழு : ஏ காளி மச்சினி கூலி மச்சனி…
கமல மச்சினி கம்மா…
ஏ குமல மச்சினி கும்மா…

குழு : ஏ கமாலோ குமாலோ…
கூலி மச்சினி கும்மா…
காளி மச்சினி கம்மா…

ஆண் : வண்டி தடத்து வழி…
மழ தண்ணி ஒடுமடி…

—BGM—

ஆண் : வண்டி தடத்து வழி…
மழ தண்ணி ஒடுமடி…
பாத தடத்து வழி…
பாவி மனம் போகுதடி…

ஆண் : பாண்டிக்குடி தேனே…
உன்னை தாவி புடிப்பேனே…
பாண்டிக்குடி தேனே…
உன்னை தாவி புடிப்பேனே…

பெண் : மொற பொண்ணு குத்த வச்சி…
மூலையில சமஞ்சிருக்கா…
மொற பொண்ணு குத்த வச்சி…
மூலையில சமஞ்சிருக்கா…

பெண் : அடுத்த வீட மோப்பம் விடும்…
ஆம்பளைக்கு அறிவிருக்கா…
ஒடி போயா வழுக்க…
இவ உசிலம்பட்டி ஒலக்க…
அட ஒடி போயா வழுக்க…
இவ உசிலம்பட்டி ஒலக்க…

—BGM—

ஆண் : உள்ளுக்குள்ள உள்ளுக்குள்ள…
உள்ளுக்குள்ள புழுங்குதடி…
உச்சந்தலை வேர்க்குதடி…

ஆண் : உள்ளுக்குள்ள புழுங்குதடி…
உச்சந்தலை வேர்க்குதடி…
கும்பகரை பக்கம் தானே…
குளிக்க போவோம் ரெண்டு பேரும்…

ஆண் : சீயக்காயும் தாரேன்…
நான் தேச்சி விடவும் வாரேன்…
சீயக்காயும் தாரேன்…
நான் தேச்சி விடவும் வாரேன்…

பெண் : சீயக்கா பொடி இருக்கு…
தேச்சி விட ஆளிருக்கு…
சீயக்கா பொடி இருக்கு…
தேச்சி விட ஆளிருக்கு…

பெண் : குளிக்கையில அழுக்கானா…
குமரிக்கொரு வழி இருக்கா…
சூடு ஏறி போச்சு…
இது சுத்தி வளைக்கிற பேச்சு…
சூடு ஏறி போச்சு…
இது சுத்தி வளைக்கிற பேச்சு…

குழு : ஏ காளி மச்சினி கூலி மச்சனி…
கமல மச்சினி கம்மா
ஏ குமல மச்சினி கும்மா…

குழு : ஏ கமாலோ குமாலோ…
கூலி மச்சினி கும்மா…
காளி மச்சினி கம்மா…

ஆண் : புத்தி கெறங்குடி பொழுது…
கொஞ்சம் மசங்குதடி…
புத்தி கெறங்குடி பொழுது…
கொஞ்சம் மசங்குதடி…

ஆண் : பிச்ச கேட்ட மச்சானுக்கு…
எச்சி தண்ணி ஊத்திக் கொடு…
யான பசி எனக்கா…
அடி சோள பொறி இருக்கா…
யான பசி எனக்கா…
அடி சோள பொறி இருக்கா…

பெண் : சண்டையிட்டு கேட்ட மச்சான்…
மண்டியிட்ட மாயம் என்ன…
சண்டையிட்டு கேட்ட மச்சான்…
மண்டியிட்ட மாயம் என்ன…

பெண் : தேரு கொண்ட மச்சான்…
தெக்க இப்ப நின்னதென்ன…
அப்படி வாயா வழிக்கு…
நான் தொலக்கி வைக்கனும் தொலக்கி…
அப்படி வாயா வழிக்கு…
நான் தொலக்கி வைக்கனும் தொலக்கி…

குழு : ஏ காளி மச்சினி கூலி மச்சனி…
கமல மச்சினி கம்மா
ஏ குமல மச்சினி கும்மா…

குழு : ஏ கமாலோ குமாலோ…
கூலி மச்சினி கும்மா…
காளி மச்சினி கம்மா…

குழு : கூலி மச்சினி கும்மா…
காளி மச்சினி கம்மா…


Notes : Mocha Kotta Pallazhagi Song Lyrics in Tamil. This Song from Ulavaali (1994). Song Lyrics penned by Unknown. மொச்ச கொட்ட பல்லழகி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading