மன்னார்குடி கலகலக்க

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்மாணிக்க விநாயகம், ராஜலட்சுமி தேவி & சின்னபொண்ணுவித்யாசாகர்சிவப்பதிகாரம்

Mannarkudi Kalakalakka Song Lyrics in Tamil


ஆண் : ஆடாத வண்டியிலே…
அதிராத கொண்டையிலே…
அதிராத கொண்டையிலே…
பூவால பூ முடிஞ்சு…
அமுசவள்ளி வந்திருக்கா…
ஊரு ஆம்பளைங்க பத்திரம்யா…

BGM

பெண் : ஏ… மன்னார்குடி கலகலக்க…
மதுரஜில்லா மணமணக்க…
ஆண்டிபட்டி சிலுசிலுக்க…
அரசன்பட்டி கமகமக்க…

ஆண் : தேனியெல்லாம் தகதகக்க…
வீரபாண்டி கிறுகிறுக்க…
சின்னமன்னுார் சிறுசிறுக்க…
கம்பமெல்லாம் கதகதக்க…

பெண் : பொழியும்தான் பொசபொசக்க…
பெரியகுளம் கிசுகிசுக்க…

ஆண் : ஹே… வத்தலகுண்டு வட வடக்க…
வாடிப்பட்டி பளபளக்க…

BGM

பெண் : ஏ… உசலம்பட்டி உச்சுக்கொட்ட…
சேடப்பட்டி நச்சுக்கொட்ட…

ஆண் : கலிங்கப்பட்டி கரிச்சுக்கொட்ட…
காரியப்பட்டி வேர்த்துக் கொட்ட…

பெண் : திருபுவனம் சொக்கி நிக்க…
சிவகங்க திக்கி நிக்க…

ஆண் : அட வரிசநாடு சாய வழி…
வாழ ஊத்து சரிய…
புளிச்சம்பட்டி காயம்…
அந்த பூசலூரு கருக…

பெண் : சும்மா ஆடி வந்தேன் ஆடிவந்தேன் ஆட்டம்…
என் மேல பல மைனருக்கு நோட்டம்…
சும்மா ஆடி வந்தேன் ஆடிவந்தேன் ஆட்டம்…
இது குத்தகைக்கு குடுக்காத தோட்டம்…

BGM

பெண் : ஏ… ஊதா சட்ட போட்ட பையன்…
ஊர் ஊரா திரிஞ்ச பையன்…
உச்சிக்கொட்டி பார்த்த பையன்…
ஊதாரியா நின்ன பையன்…

பெண் : கூரை எட்டி பார்த்த பையன்…
குப்புறத்தான் விழுந்த பையன்…
ரெண்டாம் ஆட்டம் போனபையன்…
ரொம்பவுந்தான்பயந்த பையன்…

பெண் : ஆட தின்னு வளந்த பையன்…
ஆடாமலே கவுந்த பையன்…
வேட்டி கட்ட விட்ட பையன்…
விந்தி விந்தி நடந்த பையன்…

BGM

பெண் : ஏ… ஒத்த செருப்போ போட்ட பையன்…
ஒரசி ஒரசி தேஞ்ச பையன்…
விசிலடிச்சு கிழிச்ச பையன்…
வீணாகத்தான் போன பையன்…

பெண் : சந்தைக்குத்தான் வந்த பையன்…
சங்கதிக்கு நின்ன பையன்…

பெண் : அட வெடல பையன் ஒருத்தன்…
சும்மா வெட்டி பையன் ஒருத்தன்…
தெருவில் கெடந்த பையன் ஒருத்தன்…
தன்ன மறந்த பையன் ஒருத்தன்…

பெண் : இது கடைத்தெருவே காணாத தங்கம்…
இத களவாட போறது இந்த சிங்கம்…
இது கடைத்தெருவே காணாத தங்கம்…
இத களவாட போறது இந்த சிங்கம்…

BGM

பெண் : ஏய்… அம்மி கல்லா நான் இருக்கேன்…
மஞ்ச அரைக்க நீ வாரியா…
நஞ்ச வேலியா நான் இருக்கேன்…
நாத்து நட நீ வாரியா…

பெண் : திருவிழாவா நான் இருக்கேன்…
உறியடிக்க நீ வாரியா…
வாய்க்காலா நான் இருக்கேன்…
வழிமறிக்க நீ வாரியா…

பெண் : பனைமரமா நான் இருக்கேன்…
கல்லெடுக்க நீ வாரியா…
பந்தக்காலா நான் இருக்கேன்…
கூடை பின்ன நீ வாரியா…

பெண் : தரைமேடா நான் இருக்கேன்…
சிலம்பு சுத்த நீ வாரியா…
பஞ்சாரமா நான் இருக்கேன்…
கோழி புடிக்க நீ வாரியா…

பெண் : முந்திரி காடா நான் இருக்கேன்…
நாி விரட்ட நீ வாரியா…

பெண் : நான் ராக்கு முத்து ராக்கு…
என்ன தொட்டுக்கத்தான் சாக்கு…
அட நாக்கு முழி மூக்கு…
எல்லாம் நல்ல நல்ல சோக்கு…

பெண் : இது ஆம்பளையே பாக்காத காத்து…
என்ன அப்படியே அள்ளியெடுத்து போத்து…
இது ஆம்பளையே பாக்காத காத்து…
என்ன அப்படியே அள்ளியெடுத்து போத்து…

BGM


Notes : Mannarkudi Kalakalakka Song Lyrics in Tamil. This Song from Sivappathigaram (2006). Song Lyrics penned by Pa. Vijay. மன்னார்குடி கலகலக்க பாடல் வரிகள்.


Scroll to Top