சித்திரையில் என்ன வரும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிசுவர்ணலதா & கார்த்திக்வித்யாசாகர்சிவப்பதிகாரம்

Chithiraiyil Enna Varum Song Lyrics in Tamil


—BGM—

பெண் : சித்திரையில் என்ன வரும்…
வெயில் சிந்துவதால் வெக்க வரும்…
நித்திரையில் என்ன வரும்…
கெட்ட சொப்பனங்கள் முட்ட வரும்…

பெண் : கண்ணான கண்ணுக்குள்ளே…
காதல் வந்தால் உண்மையில் என்ன வரும்…
தேசங்கள் அத்தனையும் வென்றுவிட்ட…
தித்திப்பு நெஞ்சில் வரும்…

பெண் : சித்திரையில் என்ன வரும்…
வெயில் சிந்துவதால் வெக்க வரும்…
நித்திரையில் என்ன வரும்…
கெட்ட சொப்பனங்கள் முட்ட வரும்…

—BGM—

பெண் : பாவிப் பயனால…
இப்போ நானும் படும் பாடு என்ன…

ஆண் : ஆவிப் புகைபோலே…
தொட்டிடாம இவ போவதென்ன…

பெண் : கண்ணுக்கு காவலா…
சொப்பனத்த போடற…
கன்னத்துக்கு பவுடர…
முத்தங்களப் பூசுற…

ஆண் : நூலப் போல சீல…
பெத்தத் தாயப் போல காள…
யாரு போல காதல்…
சொல்ல யாருமே இல்ல…

ஆண் : சித்திரையில் என்ன வரும்…

பெண் : வெயில் சிந்துவதால் வெக்க வரும்…

ஆண் : நித்திரையில் என்ன வரும்…

பெண் : கெட்ட சொப்பனங்கள் முட்ட வரும்…

—BGM—

ஆண் : கேணிக் கயிறாக…
உங்க பார்வ என்ன மேலிழுக்க

பெண் : கூனி முதுகாக…
செல்ல வார்த்த வந்து கீழிழுக்க…

ஆண் : மாவிளக்கு போல நீ…
மனசையும் கொளுத்துற…
நா இடுக்கு ஓரமா…
நாணத்தப் பதுக்குற…

பெண் : யாரும் இறைச்சிடாத…
ஒரு ஊத்து போலத் தேங்கி…
ஆகிப் போச்சு வாரம்…
இவ கண்ணு முழி தூங்கி…

ஆண் : சித்திரையில் என்ன வரும்…

பெண் : வெயில் சிந்துவதால் வெக்க வரும்…

ஆண் : நித்திரையில் என்ன வரும்…

பெண் : கெட்ட சொப்பனங்கள் முட்ட வரும்…

ஆண் : கண்ணான கண்ணுக்குள்ளே…
காதல் வந்தால் உண்மையில் என்ன வரும்…

பெண் : தேசங்கள் அத்தனையும்…
வென்றுவிட்ட தித்திப்பு நெஞ்சில் வரும்…

பெண் : சித்திரையில் என்ன வரும்…

ஆண் : வெயில் சிந்துவதால் வெக்க வரும்…
நித்திரையில் என்ன வரும்…

பெண் : கெட்ட சொப்பனங்கள் முட்ட வரும்…


Notes : Chithiraiyil Enna Varum Song Lyrics in Tamil. This Song from Sivappathigaram (2006). Song Lyrics penned by Yugabharathi. சித்திரையில் என்ன வரும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading