மாரி மகமாயி அம்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்சின்னபொண்ணுவித்யாசாகர்சிவப்பதிகாரம்

Mari Magamayi Amma Song Lyrics in Tamil


பெண் : மாரி மகமாயி யம்மா…
மனக்குறைய தீர்க்குமம்மா…
இருவெள்ளி வெரதம் சொல்லி…
எடுத்து வர்றோம் மொளப்பாரி…

குழு : தானானே தானானை…
தானானே தானானே…
தானானே தானானை…
தானானே தானானே…

பெண் : காத்து மட்டும் வந்து போகும்…
கட்டப்பொம்மன் கோட்டை போல…
வெயில் படா ஓலைபின்னி…
வெதச்சு வச்சோம் மொளப்பாரி…

குழு : வெயில் படா ஓலைபின்னி…
வெதச்சு வச்சோம் மொளப்பாரி…
தானானே தானானை…
தானானே தானானே…

பெண் : நடுவினிலே பொத்தி வச்ச…
நல்ல நல்ல ஓட்டில் எல்லாம்…
வெதவெதமா பயிர் வெதச்சு…
வெக்காளிக்கு போடுங்கம்மா…

குழு : வெதவெதமா பயிர் வெதச்சு…
வெக்காளிக்கு போடுங்கம்மா…

BGM

பெண் : பாசிப்பயறு போட்ட கையில்…
பவுன்பவுனா நெலைக்குமம்மா…
தட்டாம்பயறு போட்ட கையில்…
தரணியெல்லாம் கெடைக்குமம்மா…

குழு : தட்டாம்பயறு போட்ட கையில்…
தரணியெல்லாம் கெடைக்குமம்மா…
தானானே தானானை…
தானானே தானானே…

பெண் : பச்சப்பயறு போட்ட கையில்…
ஒச்சுப்பிணி ஒழியுமம்மா…
மொளப்பாரி சொமந்த கையில்…
மும்மாரி பொழியுமம்மா…

குழு : மொளப்பாரி சொமந்த கையில்…
மும்மாரி பொழியுமம்மா…
தானானே தானானை…
தானானே தானானே…

பெண் : தோணாம தொனங்காம…
மொடவநாட்டு தண்ணிவழி…
மொளப்பாரி போகையில…
மாரியம்மா நலந்தருவா…

குழு : மொளப்பாரி போகையில…
மாரியம்மா நலந்தருவா…

குழு : தானானே தானானை…
தானானே தானானே…
தானானே தானானை…
தானானே தானானே…


Notes : Mari Magamayi Amma Song Lyrics in Tamil. This Song from Sivappathigaram (2006). Song Lyrics penned by Pa. Vijay. மாரி மகமாயி அம்மா பாடல் வரிகள்.


Scroll to Top