போதும் போதும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்பிரதீப் குமார் & அதிதி பாவராஜுஎம். எம். கீரவாணிசந்திரமுகி 2

Podhum Podhum Song Lyrics in Tamil


BGM

பெண் : போதும் போதும் களவு பார்வை…
பூவை மோதும் உனது கண்ஜாடை…
காற்றில் ஆடும் அழகு தோகை…
உன்னை சேரும் உனது கைப்பாவை…

ஆண் : யார் புள்ளி வைத்து கோர்த்த அழகின் கோலம்…
கண் கொண்டு பார்தத போது உறைந்தேன் நானும்…

ஆண் : என் கையோடு பூவாக நீ…
உன் காதோடு யாழாக நான்…
உன் கண்ணோடு வானாக நீ…
உன் நெஞ்சோடு தேனாக நான்…

பெண் : போதும் போதும் களவு பார்வை…
பூவை மோதும் உனது கண்ஜாடை…

BGM

ஆண் : சிந்தனையில் ஒட்டிக்கொண்டு…
நெஞ்சமெல்லாம் நீ ஆனாய்…
வெட்கம் சிந்தி உதறிக் கொண்டு…
இன்னும் தராமல் ஏன் போனாய்…

பெண் : உன் அருகில் நான் சேரும் தேன்காலம்…
வாழ்ந்திடும் நாள் வரை நீளாதோ…
உன்னை எண்ணி தொடாத வான்மேகம்…
இடியென மழையாக பொழியாதோ…

ஆண் : என் கையோடு பூவாக நீ…
பெண் : உன் காதோடு யாழாக நான்…

ஆண் : என் கண்ணோடு வானாக நீ…
உன் நெஞ்சோடு தேனாக நான்…

BGM

பெண் : உன்னிடத்தில் சிக்கிக் கொண்டு…
இன்பமெல்லாம் நான் காண்பேன்…
உந்தன் பேரை உளறிக்கொண்டு…
இந்தக் கனாவில் நான் போவேன்…

ஆண் : புன்னகை உன்னோடு பல காலம்…
வாழ்ந்திட ஆசையும் வரும் நேரம்…
என் அருகில் உன் கால்கள் நடைபோடும்…
உயிர் வரை உடன் வரத்தானோ…

பெண் : என் கையோடு பூவாக நீ…
ஆண் : உன் காதோடு யாழாக நான்…

பெண் : என் கண்ணோடு வானாக நீ…
ஆண் : உன் நெஞ்சோடு தேனாக நான்…

பெண் : போதும் போதும் களவு பார்வை…
பூவை மோதும் உனது கண்ஜாடை…


Notes : Podhum Podhum Song Lyrics in Tamil. This Song from Chandramukhi 2 (2023). Song Lyrics penned by Vivek. போதும் போதும் பாடல் வரிகள்.


Scroll to Top