என் உயிர்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்(கள்)திரைப்படம்
வைரமுத்துசின்மயிவிஷால் & சேகர்ரா.1

En Uyir Song Lyrics in Tamil


BGM

பெண் : என் உயிர் என்னை விட்டு பிரிந்த பின்னே…
என் தேகம் மட்டும் வாழ்ந்திடுமோ… ஒ…
கண்ணீரிலே ஹாய் மீன் வாழுமோ…

பெண் : நீ என் உடலுக்குள் உயிரல்லவா…
ஒரே உயிர் நாமல்லவோ…
உடல் வாழவே… ஓ…
உயிர் போகுமோ…

பெண் : இருதயம் தூளான பிறகு…
இடிகளை தாங்காது பட்டுப்பூச்சி சிறகு…
இனி எந்தன் வாழ்வே வீணோ வெறுமையோ…

பெண் : மண்ணின் மேல் ஒரு மாமலை இன்று…
விழுந்தது என்ன…
மலைதான் கொண்ட அருவிகள் ரெண்டும்…
அழுவதுமென்ன…

பெண் : மண்ணின் மேல் ஒரு மாமலை இன்று…
விழுந்தது என்ன…
மலைதான் கொண்ட அருவிகள் ரெண்டும்…
அழுவதுமென்ன…

BGM

பெண் : உன் கண்ணில்தானே நான் பார்த்துக்கொண்டேன்…
கண்ணே போனால் நான் என்ன காண்பேன்…
உன் செவியில்தானே நான் ஒலிகள் கேட்டேன்…
செவியே போனால் யார் பாடல் கேட்பேன்…

பெண் : கண்ணிரண்டும் கண்ணீரில் மிதக்க…
காற்றுக்கு விரல் இல்லை கண்ணீரைத் துடைக்க…
வாழ்வினை இழந்த பின் வாழ்வா… ஓ…
நீ வா…

பெண் : மண்ணின் மேல் ஒரு மாமலை இன்று…
விழுந்தது என்ன…
மலைதான் கொண்ட அருவிகள் ரெண்டும்…
அழுவதுமென்ன…

பெண் : மண்ணின் மேல் ஒரு மாமலை இன்று…
விழுந்தது என்ன…
மலைதான் கொண்ட அருவிகள் ரெண்டும்…
அழுவதுமென்ன…

BGM

பெண் : நதியோடு போகும் குமிழ் போல வாழ்க்கை…
எங்கே உடையும் யார் சொல்லக்கூடும்…
இலையோடு வழியும் மழைநீரைப்போல…
உடலோடு ஜீவன் சொல்லாமல் போகும்…

பெண் : உயிரே நான் என்ன ஆவேன்…
உணர்வே இல்லாத கல்லாகி போவேன்…
மரணத்தை வெல்ல வழி இல்லையா…
நீ சொல்…

{ பெண் : மண்ணின் மேல் ஒரு மாமலை இன்று…
விழுந்தது என்ன…
மலைதான் கொண்ட அருவிகள் ரெண்டும்…
அழுவதுமென்ன… } *(4)


Notes : En Uyir Song Lyrics in Tamil. This Song from Ra.One (2011). Song Lyrics penned by Vairamuthu. என் உயிர் பாடல் வரிகள்.


Scroll to Top