காலங்களில் அவள் வசந்தம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்பி.பி. ஸ்ரீநிவாஸ்எம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்திபாவ மன்னிப்பு

Kaalangalil Aval Vasantham Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : காலங்களில் அவள் வசந்தம்…
கலைகளிலே அவள் ஓவியம்…
மாதங்களில் அவள் மார்கழி…
மலர்களிலே அவள் மல்லிகை…

ஆண் : காலங்களில் அவள் வசந்தம்…
கலைகளிலே அவள் ஓவியம்…
மாதங்களில் அவள் மார்கழி…
மலர்களிலே அவள் மல்லிகை…

ஆண் : காலங்களில் அவள் வசந்தம்…

—BGM—

ஆண் : பறவைகளில் அவள் மணி புறா…
பாடல்களில் அவள் தாலாட்டு…

—BGM—

ஆண் : பறவைகளில் அவள் மணி புறா…
பாடல்களில் அவள் தாலாட்டு…
கனிகளிலே அவள் மாங்கனி…
கனிகளிலே அவள் மாங்கனி…
காற்றினிலே அவள் தென்றல்…

ஆண் : காலங்களில் அவள் வசந்தம்…
கலைகளிலே அவள் ஓவியம்…
மாதங்களில் அவள் மார்கழி…
மலர்களிலே அவள் மல்லிகை…

ஆண் : காலங்களில் அவள் வசந்தம்…

—BGM—

ஆண் : பால்போல் சிரிப்பதில் பிள்ளை…
அவள் பனிபோல் அணைப்பதில் கன்னி…
பால்போல் சிரிப்பதில் பிள்ளை…
அவள் பனிபோல் அணைப்பதில் கன்னி…

ஆண் : கண்போல் வளர்ப்பதில் அன்னை…
கண்போல் வளர்ப்பதில் அன்னை…
அவள் கவிஞன் ஆக்கினால் என்னை…

ஆண் : காலங்களில் அவள் வசந்தம்…
கலைகளிலே அவள் ஓவியம்…
மாதங்களில் அவள் மார்கழி…
மலர்களிலே அவள் மல்லிகை…

ஆண் : காலங்களில் அவள் வசந்தம்…


Notes : Kaalangalil Aval Vasantham Song Lyrics in Tamil. This Song from Paava Mannippu (1961). Song Lyrics penned by Kannadasan. காலங்களில் அவள் வசந்தம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading