எல்லோரும் கொண்டாடுவோம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன் & நாகூர் இ.எம்.ஹனிஃபாஎம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்திபாவ மன்னிப்பு

Ellorum Kondaaduvom Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : எல்லோரும் கொண்டாடுவோம்…
எல்லோரும் கொண்டாடுவோம்…

குழு : அல்லாவின் பேரை சொல்லி…
நல்லோர்கள் வாழ்வை எண்ணி…

ஆண் : அல்லாவின் பேரை சொல்லி…
நல்லோர்கள் வாழ்வை எண்ணி…

ஆண் : எல்லோரும் கொண்டாடுவோம்…
குழு : எல்லோரும் கொண்டாடுவோம்…

—BGM—

ஆண் : கல்லாக படுத்திருந்து கழித்தவர் யாருமில்ல…
குழு : கல்லாக படுத்திருந்து கழித்தவர் யாருமில்ல…

ஆண் : கை கால்கள் ஓய்ந்த பின்னே…
துடிப்பதில் லாபமில்லை…
குழு : கை கால்கள் ஓய்ந்த பின்னே…
துடிப்பதில் லாபமில்லை…

ஆண் : வந்ததை வரவில் வைப்போம்…
செய்வதை செலவில் வைப்போம்…

குழு : வந்ததை வரவில் வைப்போம்…
செய்வதை செலவில் வைப்போம்…

ஆண் : இன்று போல் என்றும் இங்கே ஒன்றாய் கூடுவோம்…

ஆண் : எல்லோரும் கொண்டாடுவோம்…
குழு : எல்லோரும் கொண்டாடுவோம்…

—BGM—

ஆண் : நூறு வகை பறவை வரும்…
கோடி வகை பூ மலரும்…
ஆட வரும் அத்தனையும்…
ஆண்டவனின் பிள்ளையடா… ஆஆ ஆஹா ஆஆ…

—BGM—

ஆண் : கறுப்பில்லே வெளுப்புமில்லே…
கனவுக்கு உருவமில்லே…
கறுப்பில்லே வெளுப்புமில்லே…
குழு : கனவுக்கு உருவமில்லே…

ஆண் : கடலுக்குள் பிரிவுமில்லை…
கடவுளில் பேதமில்லை…
குழு : கடலுக்குள் பிரிவுமில்லை…
கடவுளில் பேதமில்லை…

ஆண் : முதலுக்கு அன்னை என்போம்…
முடிவுக்கு தந்தை என்போம்…

குழு : முதலுக்கு அன்னை என்போம்…
முடிவுக்கு தந்தை என்போம்…

ஆண் : மண்ணிலே விண்ணை கண்டு ஒன்றாய் கூடுவோம்…

ஆண் : எல்லோரும் கொண்டாடுவோம்…
குழு : எல்லோரும் கொண்டாடுவோம்…

—BGM—

ஆண் : ஆடையின்றி பிறந்தோமே…
ஆசையின்றி பிறந்தோமா…
ஆடி முடிக்கையிலே அள்ளி சென்றோர் யாருமுண்டோ…

ஆண் : படைத்தவன் சேர்த்து தந்தான்…
வளத்தவன் பிரித்து வைத்தான்…
படைத்தவன் சேர்த்து தந்தான்…
குழு : வளத்தவன் பிரித்து வைத்தான்…

ஆண் : எடுத்தவன் மறைத்து கொண்டான்…
கொடுத்தவன் தெருவில் நின்றான்…
குழு : எடுத்தவன் மறைத்து கொண்டான்…
கொடுத்தவன் தெருவில் நின்றான்…

ஆண் : எடுத்தவன் கொடுக்க வைப்போம்…
கொடுத்தவன் எடுக்க வைப்போம்…
குழு : எடுத்தவன் கொடுக்க வைப்போம்…
கொடுத்தவன் எடுக்க வைப்போம்…

ஆண் : இன்று போல் என்றும் இங்கே ஒன்றாய் கூடுவோம்…

ஆண் : எல்லோரும் கொண்டாடுவோம்…
குழு : எல்லோரும் கொண்டாடுவோம்…

குழு : அல்லாவின் பேரை சொல்லி…
நல்லோர்கள் வாழ்வை எண்ணி…

ஆண் : அல்லாவின் பேரை சொல்லி…
நல்லோர்கள் வாழ்வை எண்ணி…

ஆண் : எல்லோரும் கொண்டாடுவோம்…
எல்லோரும் கொண்டாடுவோம்…
குழு : எல்லோரும் கொண்டாடுவோம்…


Notes : Ellorum Kondaaduvom Song Lyrics in Tamil. This Song from Paava Mannippu (1961). Song Lyrics penned by Kannadasan. எல்லோரும் கொண்டாடுவோம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading