எந்தன் குரல் கேட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அகத்தியன்கே.எஸ். சித்ராதேவாகோகுலத்தில் சீதை

Endhan Kural Song Lyrics in Tamil


பெண் : எந்தன் குரல் கேட்டு…
உனை தூக்கம் தழுவாதா…

—BGM—

பெண் : எந்தன் குரல் கேட்டு…
உனை தூக்கம் தழுவாதா…
பந்தம் நான் இல்லை பரிதாபம் கூடாதா…
நண்பனே நண்பனே நண்பனே…

பெண் : இவள் சொல்லும் வேதம் அரங்கேறுமா…
உனக்கென்று வாழ்வில் ஓர் நியாயமா…
இதை யாரிடம் சொல்லுவேன்…
நண்பனே நண்பனே நண்பனே…

பெண் : எந்தன் குரல் கேட்டு…
உனை தூக்கம் தழுவாத…
பந்தம் நான் இல்லை பரிதாபம் கூடாதா…

—BGM—

பெண் : இரவென்றும் பகல் என்றும் உனக்கில்லையே…
இளங்காலை பொன்மாலை உனக்கில்லையே…
மதுவென்னும் தவறுக்கு ஆளாகினாய்…
அதற்காக நியாயங்கள் நீ தேடினாய்…

பெண் : ஆயிரம் பூக்களில் ஆனந்தம் காண்கிறாய்…
நிறங்களே வேற்றுமை நினைத்திடு நண்பனே…
மது கிண்ணம்தனை எடுத்து…
பெண்ணை விலை கொடுத்து விழி மூடுமா…

பெண் : எந்தன் குரல் கேட்டு…
உனை தூக்கம் தழுவாதா…
பந்தம் நான் இல்லை பரிதாபம் கூடாதா…

—BGM—

பெண் : வரவின்றி செலவானால் தவறில்லையே…
வாழ் நாட்கள் செலவானால் வரவில்லையே…
நேற்றோடும் இன்றோடும் நீ இல்லையே…
நாளை உன் கையோடு உனக்கில்லையே…

பெண் : யாரிடம் தவறில்லை…
யாரிடம் குறை இல்லை…
தூக்கமே நிம்மதி தூங்கிடு நண்பனே…
நீ கடந்த காலங்களை கலைந்து எறிந்து விடு…
விழி மூடுமே…

பெண் : எந்தன் குரல் கேட்டு…
உனை தூக்கம் தழுவாதா…
பந்தம் நான் இல்லை பரிதாபம் கூடாதா…
நண்பனே நண்பனே நண்பனே…

பெண் : இவள் சொல்லும் வேதம் அரங்கேறுமா…
உனக்கென்று வாழ்வில் ஓர் நியாயமா…
இதை யாரிடம் சொல்லுவேன்…
நண்பனே நண்பனே நண்பனே…

—BGM—


Notes : Endhan Kural Song Lyrics in Tamil. This Song from Gokulathil Seethai (1996). Song Lyrics penned by Agathiyan. எந்தன் குரல் கேட்டு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading