கோகுலத்து கண்ணா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அகத்தியன்எஸ். பி. பாலசுப்ரமணியம், கே.எஸ். சித்ரா, பேபி தீபிகா & தேவாதேவாகோகுலத்தில் சீதை

Gokulathu Kanna Song Lyrics in Tamil


—BGM—

குழு : என் நாவினில் இருப்பது சரஸ்வதியே…
என்னை பாட வைப்பது கணபதியே…

BGM

பெண் : கோகுலத்து கண்ணா கண்ணா…
சீதை இவள்தானா…
மானும் இல்லை ராமன் இல்லை…
கோகுலத்தில் நானா…

பெண் : சோகமில்லை சொந்தம் யாரும் இல்லை…
ராவணின் நெஞ்சில் காமமில்லை…
கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே…
கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே…

BGM

பெண் : ஆசைக்கொரு ஆளானவன்…
ஆனந்தத்தில் கூத்தானவன்…
கோபியர்கள் நீராடிட…
கோலங்களை கண்டானவன்…

பெண் : ஆடை அள்ளி கொண்டானவன்…
அழகை அள்ளி தின்றானவன்…
போதையிலே நின்றானவன்…
பூஜைக்கின்று வந்தானவன்…

பெண் : அவன் உலா உலா உலா உலா…
தினம் தினம் பாரீர்…
தினம் விழா விழா விழா விழா…
வாழ்க்கையில் தேவை…
கண்ணா உன்னை நாள் தோறுமே…
கை கூப்பியே நான் பாடுவேன்…

பெண் : கோகுலத்து கண்ணா கண்ணா…
சீதை இவள்தானா…
மானும் இல்லை ராமன் இல்லை…
கோகுலத்தில் நானா…

ஆண் : சோகமில்லை சொந்தம் தேவை இல்லை…
ராவணின் நெஞ்சில் காமமில்லை…
கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே…
கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே…

BGM

ஆண் : ஆசைக்கொரு ஆளாகினான்…
கீதை என்னும் நூலாகினான்…
யமுனை நதி நீராடினான்…
பாண்டவர்க்கு போராடினான்…

ஆண் : ஆடை அள்ளி கொண்டாடினான்…
த்ரௌபதிக்கு தந்தாடினான்…
பெண்களுடன் கூத்தாடினான்…
பெண்ணை கண்டு கை கூப்பினான்…

ஆண் : ஒரு நிலா நிலா நிலா நிலா…
வந்தது நேரில்…
திருவிழா விழா விழா விழா…
ஆனது வீடே…
என் வாழ்க்கையே பிருந்தாவனம்…
நானாகவே நான் வாழ்கிறேன்…

ஆண் : கோகுலத்து கண்ணா கண்ணா…
லீலை விடுவாயா…
கோகுலத்தில் சீதை வந்தால்…
நீயும் வருவாயா…

ஆண் : ஆயிரம் பேர் உன்னை காதலித்தார்…
ருக்மணியை நீ கை பிடித்தாய்…
கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே…
ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே…

ஆண் : இந்த வீட்டுக்கு வந்தவள் ருக்மணியே…
இவள் வாழ்க்கைக்கு ஏற்ற பௌர்ணமியே…
இந்த வீட்டுக்கு வந்தவள் ருக்மணியே…
இவள் வாழ்க்கைக்கு ஏற்ற பௌர்ணமியே…

BGM


Notes : Gokulathu Kanna Song Lyrics in Tamil. This Song from Gokulathil Seethai (1996). Song Lyrics penned by Agathiyan. கோகுலத்து கண்ணா பாடல் வரிகள்.


Scroll to Top