மாலை பொழுதின் மயக்கத்திலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்பி. சுசீலாஎம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்திபாக்கியலட்சுமி

Maalai Pozhuthin Song Lyrics in Tamil


BGM

பெண் : மாலை பொழுதின் மயக்கத்திலே…
நான் கனவு கண்டேன் தோழி…
மாலை பொழுதின் மயக்கத்திலே…
நான் கனவு கண்டேன் தோழி…

பெண் : மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை…
காரணம் ஏன் தோழி…
காரணம் ஏன் தோழி… ஆஆஆ…

பெண் : மாலை பொழுதின் மயக்கத்திலே…
நான் கனவு கண்டேன் தோழி…

பெண் : இன்பம் சிலநாள்…
துன்பம் சிலநாள்…
என்றவர் யார் தோழி…

பெண் : இன்பம் கனவில்…
துன்பம் எதிரில்…
காண்பது ஏன் தோழி…
காண்பது ஏன் தோழி… ஆஆஆ…

பெண் : மாலை பொழுதின் மயக்கத்திலே…
நான் கனவு கண்டேன் தோழி…

BGM

பெண் : மணமுடித்தவர் போல்…
அருகினிலே ஓர் வடிவு கண்டேன் தோழி…
மங்கை என் கையில்…
குங்குமம் தந்தார் மாலை இட்டார் தோழி…

BGM

பெண் : வழி மறந்தேனோ வந்தவர் நெஞ்சில்…
சாய்ந்துவிட்டேன் தோழி…

பெண் : அவர் மறவேன் மறவேன் என்றார் உடனே…
மறந்துவிட்டார் தோழி…
மறந்துவிட்டார் தோழி… ஆஆஆ…

பெண் : மாலை பொழுதின் மயக்கத்திலே…
நான் கனவு கண்டேன் தோழி…

BGM

பெண் : கனவில் வந்தவர் யாரென கேட்டேன்…
கணவர் என்றார் தோழி…
கணவர் என்றால் அவர் கனவு முடிந்ததும்…
பிரிந்தது ஏன் தோழி…

BGM

பெண் : இளமை எல்லாம் வெறும் கனவு மயம்…
இதில் மறைந்தது சில காலம்…

பெண் : தெளிவும் அறியாது…
முடிவும் தெரியாது…
மயங்குது எதிர்காலம்…
மயங்குது எதிர்காலம்… ஆஆஆ…

பெண் : மாலை பொழுதின் மயக்கத்திலே…
நான் கனவு கண்டேன் தோழி…

பெண் : மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை…
காரணம் ஏன் தோழி…
காரணம் ஏன் தோழி… ஆஆஆ…

பெண் : மாலை பொழுதின் மயக்கத்திலே…
நான் கனவு கண்டேன் தோழி…


Notes : Maalai Pozhuthin Song Lyrics in Tamil. This Song from Bhagyalakshmi (1961). Song Lyrics penned by Kannadasan. மாலை பொழுதின் மயக்கத்திலே பாடல் வரிகள்.


Scroll to Top