புதிரே என் புதிரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஏ. பி. ராஜாரவி ரகுநந்தன் & அக்ஷரா ஸ்ரீதரன்சதீஷ் செல்வம்அக்கு

Puthirey En Puthirey Song Lyrics in Tamil


ஆண் : கண்ணில் கண் மோதினால்…
இலட்சம் மின்னல் பூ பூக்கும்…
நெஞ்சில் ஓர் வானவில்…
எட்டி எட்டிதான் பார்க்கும்…

ஆண் : உள்ளே தீராமலே…
கைகள் கோர்க்கும் நாள் கேட்கும்…
மீசையினில் உன் வாசம்…
என்னைத் தொலைத்தேனே…

BGM

ஆண் : புதிரே என் புதிரே…
புரியாமல் உயிராய் ஆனாயே…
கதிரே வெண் கதிரே…
அதிகாலை இரவில் தந்தாயே…

ஆண் : தொட்டிலையும் ஆட்டிவிட்டு…
கிள்ளிவிட்டு செல்லாதே…
தீண்டும் விரல் தூண்டும் போது…
தள்ளி என்னை கொல்லாதே…

ஆண் : நருவீ நருவீ இழுதாலே…
இதயம் உருவி ஓடிடுதே…
அருவி அருவி குழலோடு…
மனதும் படகாய் ஆகிடுதே…

ஆண் : மிதமாய் மிதமாய்…
உயிரும் அதிரும் கேளடி நீ…
இதமாய் இதமாய்…
வலிகள் புலரும்…

BGM

பெண் : மார்கழி பூ என்னுள்ளே பூத்ததேனோ…
தேடினேன பதிலின்றி நானும் தொலைந்ததேனோ…

பெண் : காற்றிலே ஏதோ வாசம்…
உன் திசை பார்க்கிறேன்…
வார்த்தைகள் ஏதுமின்றி தோற்கிறேன்…

ஆண் : நான் இலையென உதிர…
நீ கரையினில் பதற…
நீர் துளிகளும் சிதற…
தூரங்கள் வேண்டாமே…

ஆண் : பூ இடையினில் பதமாய்…
நான் விரல்களால் எழுதிடவா…
ஏன் இடைவெளி அழகே…
வாலிப தீயினை சேர்த்து அணைப்போம்…

ஆண் : நருவீ நருவீ இழுதாலே…
இதயம் உருவி ஓடிடுதே…
அருவி அருவி குழலோடு…
மனதும் படகாய் ஆகிடுதே…

ஆண் : மிதமாய் மிதமாய்…
உயிரும் அதிரும் கேளடி நீ…
இதமாய் இதமாய்…
வலிகள் புலரும்…

பெண் : புதிரே என் புதிரே…
ஆண் : புரியாமல் உயிராய் ஆனாயே…

பெண் : கதிரே வெண் கதிரே…
ஆண் : அதிகாலை இரவில் தந்தாயே…

ஆண் & பெண் : புதிரே என் புதிரே…
புரியாமல் உயிராய் ஆனாயே…
கதிரே வெண் கதிரே…
அதிகாலை இரவில் தந்தாயே…


Notes : Puthirey En Puthirey Song Lyrics in Tamil. This Song from Akku (2023). Song Lyrics penned by A P Raja. புதிரே என் புதிரே பாடல் வரிகள்.


Scroll to Top